தமிழ்நாட்டில், ஓசூரில் தயாராகும் பைக்னு சொன்னா நம்புவீங்களா? அதிக நாட்களுக்கு வாங்க முடியாது!

இந்தியாவில் 10,000 யூனிட்களுக்கும் மேல் விற்பனையானதைக் கொண்டாடும் விதமாக, பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா (BMW Motorrad) நிறுவனம் அதன் ஜி310 ஆர்.ஆர் (G 310 RR) பைக்கின் புதிய லிமிடெட் எடிசனை (Limited Edition) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் இந்தச் சிறப்புப் பதிப்பு ஆனது அதன் பிரத்யேகமான தோற்றத்தினாலும், ஏற்கனவே பிரபலமான ஜி310 ஆர்ஆர் பைக்கின் சிறந்த செயல்திறன் மற்றும் அம்சங்களாலும் அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லிமிடெட் எடிசன் பைக்கில் பல அலங்கார மேம்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

bmw g310 rr limited edition motorcycle

பைக்கின் சக்கர ரிம்களில் உள்ள கிராபிக்ஸ் உட்பட, முழுமையான டெக்கால் பாடி கிட் இந்த மோட்டார்சைக்கிளுக்குக் கூர்மையான மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொடுக்கிறது. பெட்ரோல் டேங்கில் உள்ள '1/310' என்ற தனித்துவமான பேட்ஜ், இது ஒரு லிமிடெட் எடிசன் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, இந்த லிமிடெட் எடிசன் பைக் ஆனது மொத்தமாகவே வெறும் 310 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் 310 பைக்குகளிலும் தனித்தனியாக '1/310', '2/310', '3/310'... என குறிப்பிடப்பட்டு கஸ்டமர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் பைக்கின் இந்த புதிய லிமிடெட் எடிசன் காஸ்மிக் பிளாக் மற்றும் போலார் ஒயிட் என இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.2.99 லட்சம் ஆகும். ஜி310 ஆர்ஆர் லிமிடெட் எடிசன், இந்தியாவின் அனைத்து பிஎம்டபிள்யூ மோட்டராட் டீலர்ஷிப்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். பிஎம்டபிள்யூவின் 1000சிசி சூப்பர்ஸ்போர்ட் பைக்கான எஸ்1000 ஆர்ஆர் (S 1000 RR)-இன் அதே உத்வேகத்துடன் முழு ஃபேர்டு (Full-faired) வடிவமைப்பை இந்த பைக் கொண்டுள்ளது.

முழு-எல்இடி ஹெட்லைட்கள், ட்ரான்ஸ்பரண்ட் வைசர் மற்றும் கருப்பு நிற ஹேண்டில்பார்களுடன் கூடிய இந்த பைக்கின் கூர்மையான முகப்பு பகுதி அதன் ரேசிங் ஸ்டைலை வெளிப்படுத்துகிறது. ஏரோடைனமிக் பாடிவொர்க், சாம்பியன்ஸ் டூம் மற்றும் டேங்க்-ஹக்கிங் ரைடர் எர்கோனாமிக்ஸ் ஆகியவை டிராக் பைக்குகளுக்கான DNA-ஐ இந்த பைக்கில் பிரதிபலிக்கின்றன.

bmw g310 rr limited edition motorcycle

கோல்டு நிறத்திலான USD சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள், அலுமினியத்திலான ஸ்விங்கார்ம் மற்றும் மிச்செலின் பைலட் ஸ்ட்ரீட் டயர்கள் போன்ற பிரீமியம் அம்சங்கள் இந்த பைக்கின் அழகியலையும் செயல்திறனையும் உறுதி செய்கின்றன. இந்த லிமிடெட் எடிசனில், சிறப்பான கிராபிக்ஸ், பயணங்கள் குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் ரைடிங் மோட் (Riding Mode) அடிப்படையிலான லேஅவுட்களுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளே உள்ளது.

ஜி310 ஆர்ஆர் பைக்கில் வழக்கமாக வழங்கப்படும் அதே 312 சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் தான் இந்த புதிய லிமிடெட் எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-இல் 34 எச்பி (25 கிலோவாட்ஸ்) சக்தியையும், 7,700 ஆர்பிஎம்-இல் 27.3 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கில் உள்ள ரேஸ்-டியூன் செய்யப்பட்ட ஆன்டி-ஹாப்பிங் கிளட்ச் ஆனது வேகமான கியர் குறைப்புகளின் போது என்ஜின் பிரேக்கிங்கைக் குறைத்து, பைக்கின் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. ரைடர்கள் ட்ராக், அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் ஆகிய நான்கு ரைடு மோட்களில் ஒன்றை தேர்வு செய்து பைக்கை ஓட்டலாம்.

ஒவ்வொரு மோடும் த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் ABS செயல்பாட்டை சூழ்நிலைக்கு ஏற்ப சரிசெய்கிறது. ரைடு-பை-வயர் சிஸ்டம் துல்லியமான த்ரோட்டில் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. அதேசமயம், ஆட்டோமேட்டிக் ஐடல் ஸ்பீட் மேலாண்மை, பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது என்ஜின் ஆஃப் ஆகாமல் தடுக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிமிடெட் எடிசன் மூலம், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் விற்பனை மைல்கல்லைக் கொண்டாடுவதுடன், ஸ்போர்ட்ஸ் பைக் வரிசையில் ஜி310 ஆர்ஆர் பைக்கின் நிலையை வலுப்படுத்துகிறது. ஜி310 ஆர்ஆர் பைக்கின் இந்த லிமிடெட் எடிசன், பிரத்தியேகமான வடிவமைப்பு, ஆக்ரோஷமான ஸ்டைலிங் மற்றும் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் ஆகியவற்றின் கலவையாக, அன்றாட பயன்பாட்டிற்கும் ரேசிங் அனுபவத்திற்கும் ஏற்ற ஒரு மோட்டார்சைக்கிளைத் தேடும் ஆர்வலர்களை ஈர்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2025, 15:44 [IST]
English summary
Bmw motorrad introduces new limited edition of g310 rr motorcycle price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+