கேடிஎம் நிறுவனம் வேறொரு கைகளுக்கு மாற போகுதா! உற்பத்தி பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கு!!

உலக புகழ்பெற்ற பைக் உற்பத்தி நிறுவனங்களில் கேடிஎம் (KTM)-ம் ஒன்றாகும். இது ஓர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இப்போது மிகப் பெரிய நிதி பற்றாக் குறை பிரச்னையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்னையில் அது சிக்கி தவித்து வரும் நிலையில், தற்போது இந்த நிலை மிகப் பெரிய அளவில் தீவிரமடையத் தொடங்கி இருக்கின்றது.

இந்த நிலையிலேயே கேடிஎம் நிறுவனம் வேறொரு கைகளுக்கு மாற இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இன்னொரு ஜாம்பவான் நிறுவனம் கேடிஎம்-மை கையகப்படுத்த இருப்பதாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலக புகழ்பெற்ற பிரீமியம் டூ-வீலர் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராடே (BMW Motorrad) கேடிஎம்-மை வாங்க இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bmw rumoured to acquire ktm

Source ஆனால், இது உறுதிப்படுத்தப்படாத தகவல் ஆகும். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தகவல் உறுதியானதாக மாறும் எனில், அதாவது, பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் கேடிஎம்-மை கையகப்படுத்தும் எனில் கேடிஎம் நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகன உற்பத்தி தமிழகத்திற்கு மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், பிஎம்டபிள்யூ-வின் இரண்டு சக்கர வாகனங்கள் டிவிஎஸ் உடனான கூட்டணியின்கீழ் அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் வைத்தை பிஎம்டபிள்யூ பைக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே கேடிஎம் பைக் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, இன்னும் பல்வேறு மாற்றங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போதைய கேடிஎம் நிறுவனத்தின் நிர்வாகத்தில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனத்தின் அதிரடி மாற்றங்களால் பல ஆயிரக் கணக்கான வேலை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் பலர் இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது தற்காலிகமானதே. ஏனெனில், கேடிஎம் தற்போது சந்தித்து வரும் நிதி நெருக்கடி நிறுவனத்தை இழுத்து மூட செய்யும் அளவிற்கு உள்ளது.

இதனால்தான் கேடிஎம் வேறொரு கைகளுக்கு மாறுவதற்கான சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது. கேடிஎம்-மை பிஎம்டபிள்யூ மட்டுமல்ல பஜாஜ்-ம் கையகப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்காக பெரும் தொகையை பஜாஜ் நிறுவனம் மேலிடம் ஒதுக்குவதற்கான பணியில் களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ரூ. 1,360 கோடி வரை அது முதலீடு செய்யக் கூடும் என்றே கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. பஜாஜின் துணை நிறுவனமான நெதர்லாந்தை மையமைகக் கொண்டு இயங்கும் பஜாஜ் ஆட்டோ இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் பிவி (Bajaj Auto International Holdings BV) நிறுவனம், பைரர் பஜாஜ் ஏஜி (Pierer Bajaj AG)-இல் 49.9 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றது.

இது கேடிஎம்-இன் தற்போதைய தாய் நிறுவனமான பைரர் மொபிலிட்டி ஏஜி (Pierer Mobility AG)-இன் 75 சதவீத பங்குகளைக் கட்டுப்படுத்துகின்றது. இதன் அடிப்படையிலேயே பஜாஜ் நிறுவனம் கேடிஎம்மை கையகப்படுத்தும் என நம்பப்படுகின்றது. ஆனால், இன்னும் எந்த ஒரு தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் நிறுவனம் வேறொரு கைகளுக்கு மாற இருப்பதாக வெளியாகி இருக்கும் ஒட்டுமொத்த இரண்டு சக்கர வாகன காதலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. தற்போது நிறுவனம் சந்தித்து வரும் நிதி சிக்கல் நிறுவனத்தை மொத்தமாக முடக்கக் கூடியதாக உள்ளது என்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2025, 23:43 [IST]
English summary
Bmw rumoured to acquire ktm with production shift to india
மேலும்... #ktm #bmw motorrad
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+