அடுத்த வருஷம் முதல் பெட்ரோல் டூ-வீலர் பதிவு செய்யப்படாதா! வருகிறது புதிய பாலிசி! முடிஞ்சா இப்பவே வாங்கிருங்க..
காற்று மாசுபாட்டைக் காரணம் காட்டி உலக நாடுகள் ஐசிஇ (ICE) வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற உள் எரிப்பு எஞ்சின் கொண்ட வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்த பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஒவ்வொரு முறையும் அவற்றிற்கு எதிராக புதிய பாலிசிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.
அந்தவகையில், ஏற்கனவே 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அடுத்த ஆண்டு முதல் பெட்ரோலில் இயங்கும் டூ-வீலர்களின் பதிவை முற்றிலுமாக ஓர் மாநில நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேறு எங்கும் அல்ல டெல்லியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. மின்சாரத்தில் இயங்கும் டூ-வீலர்களுக்கு மட்டுமே பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்கான அறிவிப்பையும் டெல்லி அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. அடுத்த ஆண்டு ஆகஸ்டு முதலே ஐசிஇ டூ-வீலர்களின் பதிவு நிறுத்தப்பட இருக்கின்றது.
இது சிஎன்ஜியில் இயங்கும் டூ-வீலர்களுக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல ஐசிஇ மூன்று சக்கர வாகனங்களின் பதிவுகளும் நிறுத்தப்பட இருக்கின்றன. இதன் மீதான நடவடிக்கை இந்த ஆண்டு ஆகஸ்டிலேயே மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றிற்கு பதிலாக அந்த வாகனங்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டுமே பதிவு செய்யப்படும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

எனவே எதிர் காலத்தில் தலைநகர் டெல்லியில் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்கிற சூழல் இப்போது உருவாக தொடங்கி இருக்கின்றது. டெல்லியில் தானே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது என சந்தோஷப்பட வேண்டாம்.
விரைவில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த மாதிரியான அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது. ஏனெனில், நாடு முழுக்க காற்று மாசு என்பது நாளுக்கு நாள் மிகப் பெரிய சிக்கலாகி வருகின்றது. அதேவேளையில், தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க இன்னும் சில வருஷங்கள் ஆகலாம் என நம்பப்படுகின்றது.
மேலும், அரசுகளின் இந்த நடவடிக்கையால் வரும் நாட்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. அதேசமயம், மிக மிக வேகமாக ஐசிஇ வாகனங்களின் விற்பனைப் படிபடியாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல அரசுகளின் இந்த நடவடிக்கையால் புதிய மின்சார வாகனங்களின் வருகையும் பன்மடங்காக வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய ஐசிஇ வாகன தடை நடவடிக்கையைத் தொடர்ந்து டெல்லி அரசாங்கம் மாநிலம் முழுக்க புதிய சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கையில் களமிறங்கி இருக்கின்றது. தொடர்ந்து, புதிய கட்டுமானங்களில் இ-வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதையும் அது அறிவுறுத்தி இருக்கின்றது. குறிப்பாக, பொது இடங்களில் மின்சார சார்ஜிங் பாயிண்டை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் அரசு மிக தீவிரமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் மற்றும் வரி சலுகை உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றன. இந்த மாதிரியான நடவடிக்கைகளுடனேயே ஐசிஇ வாகனங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான பணிகளையும் அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆகையால், டைனோசர்களை போல பெட்ரோல், டீசல் போன்ற வாகனங்களும் பூமியை விட்டு முழுமையாக அழியும் நாட்கள் எதிர்காலத்தில் உள்ளது என தெளிவாக தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









