ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமா 14 டூ-வீலர்களை விற்பனைக்கு கொண்டு வர போறாங்க.. அதிகாரப்பூர்வமா அறிவிச்சுட்டாங்க..
உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று மிகப் பெரிய எண்ணிக்கையில் இந்த புதிய ஆண்டில் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. டுகாட்டி (Ducati)-யே அந்த நிறுவனம் ஆகும். ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக 14 புதிய இரண்டு சக்கர வாகன மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவே அது அறிவித்து இருக்கின்றது. எனவே கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த 2025 ஆம் ஆண்டும் இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய ஆண்டாக அமையும் என்பது இப்போதே தெரிய வந்திருக்கின்றது.
இப்போதைக்கு குறிப்பிட்ட சில மாடல்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. 7 ஆம் தலைமுறை பனிகேல் வி4 (Panigale V4 7th Generation), டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி (DesertX Discovery), மல்டிஸ்ட்ரடா வி2 (Multistrada V2), ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 (Streetfighter V2) பனிகேல் வி2 (Panigale V2), 3ஆம் தலைமுறை ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 (Streetfighter V4 3rd Generation) மற்றும் இரண்டாம் தலைமுறை ஸ்கிராம்ப்ளர் டார்க் (Scrambler Dark 2nd Generation) ஆகியவையே அந்த மாடல்கள் ஆகும்.

இந்த பைக் மாடல்களையே விரைவில் இந்தியாவின் இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக டுகாட்டி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அது விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக் மாடல்களைத் தொடர்ந்து மற்ற பைக் மாடல்களின் பெயர்களையும் அது விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது, இப்போதைக்கு, 14இல் 7 மாடல்களின் பெயர்களை மட்டுமே அறிவித்திருக்கின்றது. மீதமுள்ள 7 மாடல்களின் பெயர்களை அடுத்த ஒரு சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு உள்ளாக அது அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அவை அனைத்தும் புத்தம் புதிய மாடல்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, இதில் 5 மோட்டார்சைக்கிள் மாடல்கள் லிமிடெட் எடிசன்களாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பனிகேல் வி2 ஃபைனல் எடிசன் (Panigale V2 Final Edition), பனிகேல் வி4 ட்ரைகலர் இட்டாலியா (Panigale V4 Tricolore Italia), பனிகேல் வி4 ட்ரை கலர் (Panigale V4 Tricolore) மற்றும் ஸ்கிராம்ப்ளர் ரிஸோமா (Scrambler Rizoma) ஆகியவற்றிலேயே சிறப்பு பதிப்புகளை அது விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துடன், மேலும் ஒன்று ஐந்தவாது மாடலாக சிறப்பு பதிப்பு பைக் மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த 14 பைக் மாடல்களில் முதல் இரண்டு முதல் காலாண்டிலும், அடுத்த இரண்டு இரண்டாவது காலாண்டிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.
டுகாட்டி நிறுவனம் இவ்வளவு மிகப் பெரிய எண்ணிக்கையில் புதிய பைக் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வருவது மட்டுமல்ல, அதனுடைய விற்பனையகங்களையும் விரிவாக்கம் செய்யும் பணியில் டுகாட்டி களமிறங்கி இருக்கின்றது. ஆகையால், மிகவும் வலுவான வரவேற்பை இந்த 2025 ஆம் ஆண்டில் டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் முதல் 2025ஆம் ஆண்டிற்கான அறிமுகம் நடப்பு மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அரங்கேற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரீமியம் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டே டுகாட்டி நிறுவனம் அதன் புத்தம் புதிய 14 பைக் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








