மொத்த சொத்தையும் விற்றால் கூட இந்த பைக்கை வாங்குவது கஷ்டம்... விலையை சொல்லாமல் புக்கிங்கை துவங்கிய டுகாட்டி!

டுகாட்டி (Ducati), உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். நம் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக டுகாட்டியின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளது. இந்த 2025ஆம் வருடத்தில் மட்டும் சுமார் 14 புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய டுகாட்டி திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அந்த 14 பைக்குகளுள் ஒன்றான டுகாட்டி டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி (DesertX Discovery) பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நம் இந்தியர்களை பொறுத்தவரையில், டுகாட்டி பைக்குகள் விலையுயர்ந்தவைகளாக கருதப்படுகின்றன. அதற்கேற்ப டுகாட்டி பைக்குகளின் விலைகளும் நம் நாட்டில் நிறைய பேரால் வாங்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்தியாவிலும் டுகாட்டி பைக்குகளுக்கு என்று குறிப்பிடத்தக்க ரசிகர் கூட்டம் உள்ளது.

ducati desertx discovery bookings open

இந்தியாவில் டுகாட்டி கஸ்டமர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக, டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கிற்கான புக்கிங்குகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதனை டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது அபிஷியல் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில், ஏற்கனவே டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மற்றும் டெசர்ட் எக்ஸ் ராலி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவை இரண்டிற்கும் இடையில் புதிய டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த புதிய டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் விலைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், ரூ.21 லட்சத்தில் இந்த புதிய டுகாட்டி பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம்.

ducati desertx discovery bookings open

புதிய டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி ஆனது கருப்பு மற்றும் டுகாட்டி சிவப்பு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மற்ற டெசர்ட் எக்ஸ் பைக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த டிஸ்கவரி வெர்சனில் கிராஃபிக்ஸ் பிரத்யேகமானதாக கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கில் பொருத்தப்பட்டுள்ள டிகால்கள் (Decals) அவை சேதமடைந்தாலும் எளிதில் மாற்றக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளன.

டூரிங் விண்ட்ஸ்க்ரீன், புல்-பார் மூலம் பாதுகாக்கப்பட்ட வாட்டர் பம்ப் & பெட்ரோல் டேங்க், என்ஜினை பாதுகாக்க பேஷ் தட்டு, பஞ்சர்களில் இருந்து பாதுகாக்க ரேடியேட்டர் கார்ட் மற்றும் செண்டர் ஸ்டாண்ட்டை கொண்டுள்ள புதிய டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கில் 937சிசி டெஸ்டாஸ்ட்ரெட்டா என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

ducati desertx discovery bookings open

அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 108 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 92 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் டுகாட்டி குயிக் ஷிஃப்டர் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பைக்கிற்கான சர்வீஸ் இண்டர்வெல்களை டுகாட்டி குறைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டுகாட்டி பைக்குகளின் சிறப்பம்சமே அவற்றை கஸ்டமர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்பதாகும். அந்த வகையில், புதிய டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கையும் கஸ்டமர்களின் விருப்பத்திற்கேற்ப தொழிற்சாலையிலேயே டுகாட்டி மாற்றிக் கொடுக்க உள்ளது. மற்றப்படி, இந்த புதிய டுகாட்டி பைக் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த விபரங்கள் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 29, 2025, 22:49 [IST]
English summary
Ducati india open bookings for desertx discovery
மேலும்... #ducati #bike booking #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X