ஊர் சுத்த ஏற்ற பைக் அறிமுகம்.. இந்த பைக் கையில இருந்தா ஊரு என்ன உலகத்தையே அஜித் போல சுத்திட்டு வரலாம்!
ஊர் சுற்ற ஏற்ற அம்சங்களுடன் ஓர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. டுகாட்டி டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி (Ducati DesertX Discovery) இதுவே அந்த பைக் மாடல் ஆகும். இந்த பைக்கில் நெடுந்தூர டிராவல்களைகூட மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவ்வாறு நீண்ட தூர டிராவல்களை மேற்கொள்ளும்போதும்கூட இந்த பைக்கில் பெரிய அளவில் அசௌகரியமான உணர்வு என்பதே ஏற்படாது என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே அப்பைக்கில் சிறப்பம்சங்கள் பலவற்றை டுகாட்டி நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
அதில், மிக முக்கியமானதாக பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கை உள்ளது. எவ்வளவு தூரம் டிராவல் செய்தாலும் கொஞ்சமும்கூட அது அசௌகரியமான டிராவல் அனுபவத்தை வழங்காது என நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனால்தான் இந்த பைக்கில் உள்ளூர் மட்டுமல்ல வெளி நாடுகளுக்கும்கூட சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

நடிகர் அஜித் சமீபத்தில் டூ-வீலரில் உலகத்தைச் சுற்றி வந்ததுகூட இந்த மாதிரியான ஓர் டூ-வீலரிலேயே என்பது கவனிக்கத்தகுந்தது. டுகாட்டி நிறுவனம் டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கில் நெடுந்தூர பயணங்களை சுவாரஷ்யமானதாக மாற்றும் இருக்கையை மட்டுமல்ல இன்னும் பல அம்சங்களை வழங்கி இருக்கின்றது.
அவற்றில் ஒன்றே சூடாகும் வசதிக் கொண்ட ஹேண்ட் கிரிப் உள்ளது. இத்துடன், டூரிங் விண்ட்ஸ்கிரீன் மற்றும் அலுமினியன் பேன்னியர்கள் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, சென்டர் ஸ்டாண்டு, புல் பால், ரேடியேட்டர் குவார்டு மற்றும் எஞ்சின் பாஷ் பிளேட் உள்ளிட்டவற்றையும் டுகாட்டி நிறுவனம் மோட்டார்சைக்கிளில் வழங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல 46 மிமீ அளவுள்ள அட்ஜஸ்டபிள் யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், கேஒய்பி அட்ஜஸ்டபிள் மோனோஷாக் பின் வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த சஸ்பென்ஷன் செட்-அப் சீரான பாதையே இல்லாத சாலைகளில்கூட சௌகரியமான ரைடு அனுபவத்தை பெற பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்துடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை பெறும் நோக்கில் முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 265 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல பன்முக ரைடிங் மோட்கள், பவர் மோட்கள், வீலி கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர், க்ரூஸ் கன்ட்ரோல் என இன்னும் பல அம்சங்களை இந்த பைக்கில் டுகாட்டி நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை 937 சிசி எல்-ட்வின் வகை மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 108 பிஎச்பி மற்றும் 92 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் மற்றும் மிக அதிக பிரீமியம் தர அம்சங்களை இந்த பைக் மாடல் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலே இதன் விலையும் மிக அதிகமாக உள்ளது.
அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 21.78 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, படித்தது சரியான விலையே. இந்த உச்சபட்ச விலையிலேயே டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி விற்பனைக்குக் கிடைக்கும். அதேவேளையில், இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னும் இந்த பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்படவில்லை. விரைவிலேயே அது தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்த மாதம் தொடக்கத்திலேயே டுகாட்டி டெசர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பணக்கார இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








