எஸ்யூவி கார் வாங்குற விலையில் புது பைக்கை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட டுகாட்டி! விலை எவ்வளவு தெரியுமா?

டுகாட்டி (Ducati) நிறுவனம் புதிய 2025 மல்டிஸ்ட்ராடா வி2 (Multistrada V2) மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வி2 என்ஜின் மற்றும் எடை குறைப்புடன் வந்துள்ள புதிய மல்டிஸ்ட்ராடா பைக் அனைத்து சாலைகளிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டவை ஆக உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.18.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

ஸ்போர்ட்டியான, சுறுசுறுப்புடன் சௌகரியமான சவாரியை உறுதி செய்யும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி2 பைக் டுகாட்டி சிவப்பு வண்ணத்தில் ரூ.18.88 லட்சம் விலையிலும், அதிக அம்சங்கள் கொண்ட மல்டிஸ்ட்ராடா வி2 எஸ் பைக் டுகாட்டி சிவப்பு மற்றும் ஸ்டோர்ம் க்ரீன் வண்ணங்களிலும் முறையே ரூ.20.99 லட்சம் மற்றும் ரூ.21.29 லட்சம் விலைகளில் கிடைக்கின்றன.

Ducati Multistrada V2 launched

இந்த பைக்கின் புதிய வி2 என்ஜின் இந்தியாவின் இ20 பெட்ரோலை ஏற்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. புதிய மல்டிஸ்ட்ராடா வி2 பைக்கின் அடிப்படை வேரியண்ட்டின் எடை 199 கிலோ ஆகவும், வி2 எஸ் வேரியண்ட்டின் எடை 202 கிலோவும் (எரிபொருள் இல்லாமல்) உள்ளன. இது முந்தைய மாடலை விட 18 கிலோ எடை குறைவாகும்.

சமநிலையை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் பைக்கின் பிரேம், சப்-ஃப்ரேம் மற்றும் ஸ்விங்கார்ம் ஆகியவை அலுமினியம் மற்றும் இரும்பு கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக பைக்கை ஹேண்ட்லிங் செய்வது எளிதாகுவதுடன் அகலமான இருக்கை சௌகரியமான பயண நிலையை பராமரிக்கிறது. இந்த பைக்கின் 890சிசி வி2 ட்வின்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 10,750rpm-இல் 114bhp சக்தியையும், 8,250rpm-இல் 92Nm டார்க்கையும் வழங்குகிறது.

Ducati Multistrada V2 launched

இந்த என்ஜின் ஆனது மாறக்கூடிய இன்டேக் வால்வ் டைமிங்கைப் பயன்படுத்தி சீரான செயல்திறனை உறுதி செய்கிறது. 54.9 கிலோ எடையுள்ள இந்த புதிய என்ஜின் பைக்கின் சுறுசுறுப்புக்கு முக்கிய பங்களிக்கிறது. வி2 எஸ் பைக்கில் இது டுகாட்டி குயிக் ஷிஃப்ட் 2.0 உடன் கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. வால்வ் க்ளியரன்ஸ் இடைவெளிகள் 45,000 கிமீ ஆகும்.

மல்டிஸ்ட்ராடா வி2 பைக்கின் அடிப்படை வேரியண்ட்டில் 170மிமீ சஸ்பென்ஷன் டிராவல் உடன் மெக்கானிக்கலாக சரிசெய்யக்கூடிய 45 மிமீ மார்சோச்சி சஸ்பென்ஷன் உள்ளது. அதுவே, வி2 எஸ் வேரியண்ட்டில் எலக்ட்ரானிக்கலாக கட்டுப்படுத்தப்படும் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் (DSS) உள்ளது. இது சாலை நிலைகள் மற்றும் ஓட்டுநரின் உள்ளீடுகளுக்கு ஏற்ப தொடர்ந்து சரிசெய்துக் கொள்ளக்கூடியது ஆகும்.

எஸ் வேரியண்ட்டில் மினிமம் ப்ரீலோட் (Minimum Preload) வசதியும் உள்ளது. இது பைக் நிறுத்தப்படும்போது சஸ்பென்ஷனைக் குறைத்து, இரண்டு கால்களையும் தரையில் வைப்பதை எளிதாக்குகிறது. இரு வேரியண்ட்களிலும் 19 இன்ச் முன் சக்கரம் மற்றும் 17 இன்ச் பின் சக்கரம், பைரெல்லி ஸ்கார்பியன் ட்ரெய்ல் II டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரெம்போ காலிபர்கள் கொண்ட இரட்டை 320மிமீ முன் டிஸ்க்குகள் மற்றும் சிங்கிள் 265மிமீ பின் டிஸ்க் ஆகியவை கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் சிஸ்டத்தை ஏற்கக்கூடியவைகளாக உள்ளன. பைக்கின் எலக்ட்ரானிக் தொகுப்பு 6-ஆக்சிஸ் IMU மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதில் டுகாட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் செயல்பாடுகள் அடங்கும்.

ஸ்போர்ட், டூரிங், அர்பன், என்டூரோ மற்றும் வெட் என ஐந்து ரைடிங் மோட்களில் ஓட்டுநர்கள் இந்த பைக்கை தேர்வு செய்யலாம். இது என்ஜின் ரெஸ்பான்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் தலையீட்டை அதற்கேற்ப சரிசெய்கிறது. டுகாட்டி பானிகேல் மற்றும் மல்டிஸ்ட்ராடா வி4 பைக்குகளை போன்று காம்பாக்ட்டான முன்பக்கத்துடன் பைக்கின் உடல் வடிவமைப்பு மென்மையான கோடுகளைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயணிகளின் சௌகரியத்திற்காக மேம்படுத்தப்பட்ட இருக்கை பேடிங், மாற்றியமைக்கப்பட்ட கிராப் ஹேண்டில்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட லெக்ரூம் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி2 பைக் அதன் புதுமையான தோற்றத்தினாலும், செயல்படுதிறனினாலும் ரூ.18.88 லட்சத்தில் இருந்து விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பினும், பைக்கை அதிக பேர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 27, 2025, 17:48 [IST]
English summary
Ducati launches new multistrada v2 motorcycle in india check price features all details here
மேலும்... #ducati #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+