500 பேர் மட்டுமே இந்த வண்டியை வாங்க முடியும்! கோடி கணக்குல பணம் இருந்தாலும் வேற கிடைக்காது!

டுகாட்டி நிறுவனம் தனது ஸ்கிரம்பிளர் 10° அனிவெர்சரியோ ரிஸோமா எடிசனை அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக் ரூ17.10 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக்கை 500 பேர் மட்டுமே வாங்க முடியும். மார்டனான ஸ்கிரம்பிளர் பைக் அறிமுகுமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த லிமிடெட் எடிசன் பைக்கை கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டுகாட்டி நிறுவனம் தனது புதிய ஸ்கிரம்பிள்ர பைக்கை அறிமகமாகி 10 ஆண்டுகளாகிறது. இதை கொண்டாடும் வகையில் 10° அனிவெர்சரியோ ரிஸோமா என்ற எடிசனை உருவாக்கியுள்ளனர். இதை ரிஸோமா உடன் இந்நிறுவனம் பார்ட்னர் ஷிப் வைத்து உருவாக்கியுள்ளது. இதுஒரு லிமிடெட் எடிசன் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 500 பைக் மட்டுமே சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

Ducati Scrambler 10 Anniversario Rizoma Edition

இந்த பைக் ஒரே ஒரு வேரயின்டில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பை பொருத்தவரை இதன் பெட்ரோல் டேங்க் ஸ்டோன் ஒயிட் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு நிற சேஸிஸ் வழங்கப்பட்டுள்ளது.கவர் பகுதியில் மெட்டல் ரோஸ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதுபோக ஹேண்டில் பார் பகுதியில் இறுதியில் பொருத்தப்பட்ட கண்ணாடி சிறிய எக்ஸாஸ்ட், ஆகிய வழங்கப்பட்டுள்ளது.

இ்நத பைக்கை வடிவமைப்பு அடுத்த தலைமுறை ஸ்கிரம்பிளர் பேக்கேஜை ஒத்து இருக்கிறது. ஏர்கூல்டு டெஸ்மோடியூ ட்வின் 72 பிஎச்பி வரை வழங்கும் இன்ஜி்ன வழங்கப்பட்டுள்ளது. இது ரைடு பை பயர் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த பைக்கைில் ரைடு மோடுகள், குவிக் ஸ்விஃப்டர் கியர்கள் உள்ளது. மேலும் இதில் 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள இன்ஜின் இ20 பெட்ரோலுக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டுள்ளது.

Ducati Scrambler 10 Anniversario Rizoma Edition

இந்த பைக்கின் விலை ஸ்கிரம்பிளர் பைக்கின் விலையை விட அதிகமாக இருகு்கிறது. இந்தபைக்கில் பல கஸ்டைமைஸ்டு ஆப்ஷன்கள் உள்ளன. இந்த பைக் ஃபேக்டரியிலிருந்து வந்த பிறகு பல்வேறு விஷயங்களை சகேர்க்க கூடிய வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த பைக் உலகம் முழுவதும் 500 பைக்குகள் தான் தயாரிப்பதால் இந்தியாவிற்கு எத்தனை பைக்குகளை ஒதுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இதை வாங்க நினைப்பவர்கள் விரைவாக முடிவெடித்தால் இந்த பைக்கை வாங்க முடியும் 500 பைக்குகளும் விற்பவனையாகிவிட்டால் இந்தபைக்கை வாங்கவே முடியாது. இதனால் உங்களிடம் இந்த பைக் வாங்கும் ஐடியா இருக்கிறது, அதற்கான பணமும் இருக்கிறது என்றால் உடனடியாக இந்த பைக்கை புக் செய்யுங்கள் இல்லை என்றால் மிஸ்ஸாகிவிடும்.

இந்த பைக் தனித்துவமானது என்பதால் இந்த பைக்கை பைக் கலெக்டர்கள் சிலர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். 500 பைக்குகள் தான் உலகிலேயே தயாரிக்கப்படுகிறது என்பதால் இந்தியாவிற்கு வெகு சில பைக்குகள் மட்டுமே வரும் என எதிர்பார்க்கலாம். எத்தனை பைக்குகள் வருகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்கின் விலை ரூ17 லட்சத்திற்கும் அதிகம். இவ்வளவு விலை இந்த பைக்கின் நிறம், ஃபினிஷ், இன்ஜின், தொழிற்நுட்பத்திற்கு கிடையாது. இதுஎல்லாம் ஏற்கனவே உள்ள பைக்கில் இருப்பது போல தான் இருக்கிறது. மாறாக இந்த பைக்கின் தனித்துவ தன்மைக்காக விலை தான் இது. இந்த பைக்கை நீங்கள் வாங்க போகிறீர்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 10:45 [IST]
English summary
Ducati scrambler 10 anniversario rizoma edition launched
மேலும்... #ducati #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+