இன்னும் 2 நாள் தான்! இந்தியாவில் இருந்து இத்தனை நிறுவனங்கள் இதுல கலந்துக்குதா? ஆச்சரியமா இருக்குதே!
டூவீலர்களுக்காக பிரத்தியகமாக இத்தாலி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் EICMA என்ற கண்காட்சி நடந்து வரகிறது. இந்த கண்காட்சியில் ஏகப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும். இப்படியாக இந்தியாவில் உள்ள டாப் நிறுவனங்கள் கூட அந்த கண்காட்சியில் பங்கேற்கும். இப்படியாக இந்த 2025ம் ஆண்டிற்கான கண்காட்சி வரும் 4ம் தேதி துவங்ககிறது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டூவீலர் விரும்பிகளுக்கான சொர்க்கம் என்றால் ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் நடக்கும் EICMA கண்காட்சி தான். உலகில் உள்ள டாப் டூவீலர் பிராண்டுகள் எல்லாம் தங்கள் புதிய தயாரிப்பு, தொழிற்நுட்பம், மற்றம் பிற விஷயங்களை காட்சிப்படுத்துவார்கள். பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தான் தங்கள் புதிய தயாரிப்புகளை முதன் முறையாக அறிமுகப்படுத்துவார்கள்.

இப்படியாக இந்த 2025ம் ஆண்டிற்கான EICMA கண்காட்சி வழக்கம் போல இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் வரும் 4ம் தேதி துவங்குகிறது. 4 மற்றும் 5ம் தேதிகளல் இந்த கண்காட்சி டிரேடு பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்காக மட்டும் நடக்கும் 6 முதல் 9ம் தேதிவரை பொதுமக்கள் பார்வைக்காக இந்த கண்காட்சி திறக்கப்படுகடும். 4ம் தேதி அந்நாட்டு நேரப்படி மதியம் 1 மணிக்கு இந்த கண்ட்சி துவங்கும்.
இந்த கண்டகாசிக்கான டிக்கெட்கள் தற்போது ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான டிக்கெட்கள் 20 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ2000) என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுஆன்லைன் புக் செய்தால் கிடைக்கும் டிக்கெட்டின் விலைதான் நேரடியாக கண்காட்சிக்கு செல்ல 25 யூரோ (இந்திய மதிப்பில் ரூ2500) டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதில் மதியத்திற்கு மேல் கண்காட்சிக்கள் நுழைந்தால் டிக்கெட் கட்டணம் குறைவு தான். அதே நேரம் 4-13 வயதுடைய குழந்தைகளுக்கு சலுகை விலை டிக்கெட்களும் வழங்கப்படுகிறது. 4 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு இலவச அனுமதி கிடைக்கும். இது போக மாற்று திறனாளிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.பள்ளியிலிருந்து இந்த கண்காட்சியை காண வந்தால் அவர்களுக்கும் சலுகை விலை டிக்கெட் வழங்கப்படும்.
இந்த EICMA 2025 நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொள்கிறது. முக்கியமாக இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் கூட கலந்து கொள்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் 450 ரேலி எடிசன் பைக்கை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்போவதாக டீசர் வெளியிட்டுள்ளது. இதுபோக அந்நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் பைக்கான ஃபிளையிங் ஃபிளே எஸ்6 ஸ்கிரம்பிளர் பைக்கும் காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இது போக டிவிஎஸ் நிறுவனம் தனது மற்றொரு பிராண்டான நார்டன் மூலமாக இதில் பங்கேற்கிறது. இதில் 450 சிசி அட்வெஞ்சர் பைக் ஒன்றை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரகிறது. இது பிஎம்டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட பைக் தான். இது போக நார்டன் பிராண்டில் 4 புதிய பைகஅககள் களம் இறங்க திட்டமிடப்பட்டுள்ளன. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது எக்ஸ் பல்ஸ் 421 பைக்கை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தாலியின் நடக்கும் இந்த நிகழ்ச்சி இந்தியாவிலும் பெயர் பெற்றதாக இருக்கிறது. பல நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இதில் முக்கியமான தயாரிப்புகள் வெளியாகவுள்ளது. இந்த பைக்குகள் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கண்காட்சி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications









