இந்திய தயாரிப்பை வாங்க உலக நாடுகள் வரிசை கட்டி நிக்க போகுது! விலை இவ்ளோதானா! ராயல் என்பீல்டால் பெருமை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet). தற்போதைய நிலையில் 350 சிசி வெர்ஷனில் மட்டுமே ராயல் என்பீல்டு புல்லட் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில் இதன் 650 சிசி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ஏனெனில் ராயல் என்பீல்டு புல்லட் 650 (Royal Enfield Bullet 650) பைக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தாலியின் (Italy) மிலன் (Milan) நகரில், ஈக்மா (EICMA) வாகன திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில்தான், புல்லட் 650 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

Royal Enfield Bullet 650

ராயல் என்பீல்டு புல்லட் 650 பைக்கில், 647.95 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஷோவா சஸ்பென்ஸனை கொண்டுள்ள இந்த பைக்கின் முன் மற்றும் பின் பகுதிகளில் சிங்கிள் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு புல்லட் 650 பைக், கேனன் பிளாக், பேட்டில்ஷிப் ப்ளூ என மொத்தம் 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு பியர் 650, சூப்பர் மீட்டியோர் 650, ராயல் என்பீல்டு கிளாசிக் 650, ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650, ராயல் என்பீல்டு ஷூட்கன் 650, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 ஆகிய 650 சிசி பைக்குகளை விற்பனை செய்கிறது.

Royal Enfield Bullet 350

இந்த வரிசையில் ராயல் என்பீல்டு புல்லட் 650 பைக்கும், கூடிய விரைவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 சிசி லைன்-அப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு புல்லட் 650 பைக்கின் பவர் அவுட்புட்டை பொறுத்தவரையில், அதன் இன்ஜின் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 34.6 kW பவரையும், 5,650 ஆர்பிஎம்மில் 52.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் அதிக எடை கொண்டவையாக இருக்கும். இதற்கு ராயல் என்பீல்டு புல்லட் 650 பைக்கும் விதிவிலக்கு அல்ல. 90 சதவீத பெட்ரோல் மற்றும் ஆயில் இருக்கும் நிலையில், இதன் எடை 243 கிலோவாக இருக்கும். அதே நேரத்தில் இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 14.8 லிட்டர்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு புல்லட் 650 பைக்கின் விலை அனேகமாக 3.40 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.

அனேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே ராயல் என்பீல்டு புல்லட் 650 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பைக், இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி மற்றும் வட அமெரிக்கா உள்பட இன்னும் பல்வேறு சர்வதேச சந்தைகளிலும் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 23:56 [IST]
English summary
Eicma 2025 royal enfield bullet 650 unveiled india launch details
மேலும்... #royal enfield #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+