ஓலாக்கு விழுந்த பலத்த அடி! 5 வது இடத்துக்கு தள்ளிட்டாங்களே!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது.இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்க இடையே ஒவ்வொரு மாதமும் போட்டி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நவம்பர் மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் கடைசி தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தற்போதே இந்த தகவல்கள் வெளியாகிவிட்டன. இந்த பட்டியலை விரிவான காணலாம் வாருங்கள்.
வாகன் தளத்தின் உள்ள தரவுகளின்படி நவம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்தது டிவிஎஸ் நிறவனம் தான். இந்நிறுவனம் எலெக்ட்ரிக் 2 வீலர் செக்மெண்டில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிறுவனம் மொத்தம் 27,382 வாகனங்களை நவம்பர் மாதம் விற்பனை செய்து இது ஒட்டு மொத்த விற்பனவையில் 26 சதவீதம் ஆகும்.

2வது இடத்தில் பஜாஜ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 23,097 வாகனங்களை விற்பனைச செய்துள்ளது. இது ஒட்டு மொத்த விற்பனையில் 21.9 சதவீதம் ஆகும். இந்நிறுவனம் சேத்தக் என்ற வாகனத்தை தான் தற்போது எலெக்ட்ரிக் டூவீலராக விற்பனை செய்து வருகிறது. இந்த விற்பனைக்கு முக்கிய காரணம் பஜாஜ் பிராண்ட் மற்றும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை நகரங்கள் விஸ்தரிப்பு செய்யப்பட்டது முக்கியமான காரணம் ஆகும்.
3வது இடத்தில்ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் ரிஸ்டா ஸ்கூட்டரை வெளியிட்ட பிறகு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 18,356 வாகனங்கள் அந்நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நடந்த ஓட்டு மொத்த எலெக்டரிக் டூவீலர் விற்பனையில் 17.4 சதவீத பங்கை வைத்துள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விடா பிராண்ட் 4வது இடத்தி்ல இருகு்கிறது. இந்நிறுவனம் நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 10,579 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஒட்டு மொத்த விற்பனையில் 10 சதவீதம் ஆகும். விடா பிராண்ட் தனது ஆஃப்லைன் பிஸ்னஸை மேம்படுத்தியுள்ளது. இதனால் விற்பவனை ஒரளவிற்கு அதிகமாகியுள்ளது. இந்தியா முழுவதும் இநப்த பிராண்ட் வந்தால் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பட்டியலில் ஓலா நிறுவனம் 5வதுஇடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 7567 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது இந்தியாவில் நடந்த ஒட்டு மொத்த இவி ஸ்கூட்டர் விற்பவனையில் 7.2 சதவீதம் ஆகும். இந்நிறுவனம் ஒரு காலத்தில் நம்பர் இடத்தில் வாகனங்களை விற்பனை செய்து வந்தது. தற்போது இந்த வாகனத்தின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

6வது இடத்தில் ஆம்பியர் நிறுவனம் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 5360 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 7வது இடத்தில் பிஜிஆஸ் என்ற நிறுவனம் மொத்தம் 2410 வாகனங்கள் விற்பனையை செய்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. 8வது இடத்தில் ரிவர் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 1612 வாகனங்களை கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இவி ஸ்கூட்டர் விற்பனையில் டிவிஎஸ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஓலா நிறுவனம் அதிக விற்பனை வீழ்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









