ஓலாக்கு விழுந்த சம்மட்டி அடி! விற்பனை பாதியா குறைஞ்சிடுச்சு! என்ன காரணம்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த 2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில் கடந்தாண்டு வரை முதலிடத்தில் இருந்த ஓலா நிறுவனத்திற்கு பலத்த அடி கிடைத்து 3 இடத்திற்கு தள்ளப்பட்டு விற்பனை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இரப்பது டிவிஎஸ் நிறுவனம் தான் இந்நிறுவனம் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 1,66,204 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின் இதே முதல் 7 மாத காலகடத்தில் 1,09,952 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது 51 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பஜாஜ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 1,62,203 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 84,370 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த நிறுவனம் 92 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்தில் ஓலா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1,33,328 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான விற்பனை நிலவரம் ஆகும். இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,70,344 வானங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் 51 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

நான்காவது இடத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 98,014 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தி்ல 53,258 வானகங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 84 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சியடைந்துள்ளுது.
ஐந்தாவது இடத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இரக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 43,891 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 18,901 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆறாவது இடத்தில் கிரிவீஸ் எலெக்ட்ரிக் நிறுவனம் இருக்கிறுது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 29,554 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 18,201 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஓலா நிறுவனம் சிறப்பான விற்பனையை செய்த நிலையில் தற்போது விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இதற்கு போட்டி அதிகரித்தது முக்கியமான காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









