சென்னையை கண்டுக்கவே இல்ல... 500 எலெக்ட்ரிக் சைக்கிள்கள் உடன் 6 நகரங்களில் சேவையை துவங்கியாச்சு!!

புனேவைச் சேர்ந்த AI-ஆல் செயல்படும் நகர்ப்புற போக்குவரத்துத் தளமான எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் (ElektrikExpress), தனது முதல் 500 எலக்ட்ரிக் டெலிவரி வாகனங்களை இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்த துவங்கியுள்ளது. இந்த 6 நகரங்கள் டெல்லி, குர்கான், நொய்டா, புனே, மும்பை மற்றும் தானே ஆகும். இன்னும் சென்னையில் எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் அதன் சேவையை துவங்கவில்லை.

தற்போது, 10 முன்னணி விரைவு வணிக கூட்டணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் நிறுவனம், 2026 மார்ச் மாதத்திற்குள் 5,000 வாகனங்களுக்கும் மேலான ஒரு படையை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் தனது தனித்துவமான 'மைக்ரோலாஜி' (MicroLogi) என்ற ஏற்றுமதி & இறக்குமதிக்கான நுண்ணறிவு மென்பொருளை பயன்படுத்தி வருகிறது.

elektrikexpress electric cycles for last-mile deliveries

இந்த ஏஐ மென்பொருள் உதவியுடன், நகர்ப்புற லாஜிஸ்டிக்ஸ் மற்றும் லாஸ்ட்-மைல் விநியோகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் சரக்கு சைக்கிள்கள் (ECCs), எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் (E2Ws) மற்றும் 2.5-சக்கர எலக்ட்ரிக் டிரைக்குகளை எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் அதிகரித்து வரும் விரைவான வணிகம் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் பொருட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, 2025-26 நிதியாண்டில் மேலும் 5,000 வாகனங்களைச் சேர்க்கும் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளை எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆறு மாதங்களிலேயே, எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் 100 டன்களுக்கும் அதிகமான CO₂ உமிழ்வைக் குறைத்துள்ளது. மேலும், அதன் நெட்வொர்க் 300க்கும் அதிகமான பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ள ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 70% பேர் பெண்கள் ஆவர்.

எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு.சிந்தாமணி சர்தேசாய் கூறுகையில், "இந்தியாவின் மிக உள்ளடக்கிய மற்றும் புத்திசாலித்தனமான போக்குவரத்து தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இங்கு பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதாரம் ஒன்றிணைந்து செல்கின்றன. எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் என்பது வெறும் வாகனங்களைப் பற்றியது மட்டுமல்ல.

இது மக்களையும் நோக்கத்தையும் பற்றியது ஆகும். மைக்ரோலாஜி ஆனது செயல்திறனை உறுதிசெய்யவும், 4567 என்கிற உதவி எண்ணுக்கு அழைக்கும் வசதி ஆனது பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. பொறுப்புடன் நகரத்தின் ஏற்றுமதி & இறக்குமதிகளை மேற்கொள்ள வைக்கும் ஒரு இணைக்கப்பட்ட, அதிகாரமளிக்கப்பட்ட பணியாளர்களை நாங்கள் உருவாக்குகிறோம்," என்றார்.

எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் ஆனது, நாடு முழுவதும் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் கிக் ஊழியர்களுக்காக, அவசரகால பதில், நேரடி கண்காணிப்பு மற்றும் சமூக அடிப்படையிலான ஆதரவு போன்ற இலவச மற்றும் பிரீமியம் பாதுகாப்பு சேவைகளை வழங்கும் ஒரு விரிவான ஊழியர் பாதுகாப்பு தளமான அவசர உதவி எண் டயல்4567 என்ற பணியாளர்களுக்கான பாதுகாப்பு கேடயத்துடன் இணைந்து செயல்படுகிறது.

நிறுவனத்தின் மைக்ரோலாஜி அமைப்பு, முன்னோட்ட ஓட்டங்களின்போது கணிக்கப்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளின் மூலம் லாஸ்ட்-மைல் டெலிவிரிகளில் ஏற்படும் நேரம் வீணாகுவதை 30% குறைத்து, நேரடி செயல்பாடுகளில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த AI-ஆல் இயக்கப்படும் திறன் மூலம் கூட்டணி நிறுவனங்கள் அதிகபட்ச செயல்பாட்டு நேரத்தைப் பெறவும், செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கவும், மேலும் லாஜிஸ்டிக்ஸ் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் நிறுவனம் 500 எலெக்ட்ரிக் சைக்கிள்கள் உடன் இந்தியாவின் 6 நகரங்களில் தனது சேவையை துவங்கி இருப்பது, பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்துக்கான நிறுவனத்தின் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறது. வட இந்தியாவை தொடர்ந்து, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களிலும் விரைவில் எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் தனது சேவையை துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 13, 2025, 11:45 [IST]
English summary
Elektrikexpress deploys 500 electric cycles for last mile deliveries across tier 1 cities
மேலும்... #electric vehicles #cycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+