மோட்டாருக்கு 1 வருடம் வாரண்டி... எலெக்ட்ரிக் சைக்கிளை வாங்க பிளான் போடுபவர்களுக்கு சரியான சாய்ஸ்!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான இமோட்டார்ட் (EMotorad) இளம் தலைமுறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான, சஸ்பென்ஷன் வசதியுடன் கூடிய எலெக்ட்ரிக் சைக்கிளை (Electric Cycle) விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

'டோப்' (Dope) என்கிற பெயரில் புதிய எலெக்ட்ரிக் சைக்கிளை இமோட்டார்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள டோப் இ-சைக்கிளில் 80 மிமீ-இல் டிராவல் சஸ்பென்ஷன் ஃபோர்க் முன் சக்கரத்திற்கு மேலே வழங்கப்பட்டு உள்ளது.

emotorad dope electric cycle launched

இது, நகர சாலைகளில் மட்டுமின்றி, கரடுமுரடான பாதைகளிலும் சீரான பயணத்தை உறுதி செய்கிறது. இதன் ஆட்டோ கட்-ஆஃப் இ-பிரேக்குகள் அவசர காலங்களில் சைக்கிளை தானாக நிறுத்தி பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. இளம் தலைமுறையினர் தான் இந்த இ-சைக்கிளை அதிகம் பயன்படுத்துவார்கள் என்பதால், இந்த ஆட்டோ கட்-ஆஃப் பிரேக்குகள் கவர்ச்சிக்கரமான அம்சமாக விளங்குகின்றன.

மேலும், இந்த இ-சைக்கிளில் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள 36 வோல்ட் 250 வாட்ஸ் மோட்டார் ஆனது இளைஞர்களால் சமாளிக்கக்கூடிய அளவிற்கு போதுமான சக்தியை அளித்து, நீண்ட தூரங்களையும், சவாலான சரிவுகளையும் சவுகரியமாக கடக்க உதவுகிறது. டோப் இ-சைக்கிள் செயல்பாட்டிற்கு மட்டுமல்லாமல், சௌகரியத்திலும் சிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் 14-இன்ச் அதி வலிமையான இரும்பு ஃபிரேம் மற்றும் 24-இன்ச் நைலான் டயர்கள் நிலைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றன. சிங்கிள்-ஸ்பீடு டிரைவ்ட்ரெயின் (Single-speed Drivetrain) இளம் தலைமுறையினருக்கு எளிமையான ஹேண்ட்லிங்கை உறுதி செய்கிறது. தேவையற்ற எடையைச் சேர்க்காமல் வலிமையை உறுதி செய்யும் அலுமினிய அலாய் ரிம்களுடன், டோப் நீண்ட கால ஆயுளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

டோப் இ-சைக்கிளின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், இரட்டை-சுவர் அலுமினிய அலாய் ரிம்கள், 60 செ.மீ ஹேண்டில்பார், க்ளஸ்டர் சி2 டிஸ்ப்ளே மற்றும் 3 நிலைகளில் பெடல் அசிஸ்ட் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் 36 வோல்ட் 250 வாட்ஸ் மோட்டாரில், சைக்கிள் இருந்து நீக்கக்கூடிய 36 வோல்ட் 5.2 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரியை இமோட்டார்ட் நிறுவனம் வழங்கி உள்ளது.

emotorad dope electric cycle launched

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 17 கிமீ ஆகும். பெடல் உதவியுடன் மணிக்கு 22 கிமீ வரை செல்லலாம். இந்த இ-சைக்கிளின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்ப 2- 3 மணிநேரம் தேவைப்படும். 80 கிலோ எடை கொண்ட புதிய டோப் எலெக்ட்ரிக் சைக்கிளை ஓட்டுபவரின் உயரம் குறைந்தது 4.2 அடி முதல் அதிகபட்சம் 4.9 அடிக்குள் இருக்க வேண்டும்.

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் ஃபிரேமிற்கு 5 ஆண்டுகள், மோட்டார் ஷெல், மோட்டார், கண்ட்ரோலருக்கு 1 வருடம், பேட்டரிக்கு 2 ஆண்டுகள், மற்ற பாகங்களுக்கு (விளக்குகள், சார்ஜர்) 6 மாதங்கள் உத்தரவாதத்தை இமோட்டார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.19,999 என்கிற விலையில் இமோட்டார்ட் டோப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டோப் இ-சைக்கிளை இமோட்டார்ட் நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க் (Dealer Network) அல்லது அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) போன்ற முன்னணி ஆன்லைன் (Online) தளங்களின் வாயிலாக வாங்கலாம். ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களால் இந்த இ-சைக்கிளின் பிரத்யேக லிமிடெட் எடிஷன் சீ க்ரீன் வேரியண்ட்டை வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இமோட்டார்ட் நிறுவனத்தின் புதிய டோப் எலெக்ட்ரிக் சைக்கிள் ஆனது பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, வேடிக்கையான மற்றும் நிலையான போக்குவரத்து முறையை வழங்குவதில் முதலீடு செய்ய உதவும். தரம் மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த இ-சைக்கிளின் ரூ.19,999 விலை ஆனது குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒரு மதிப்புமிக்க முதலீடாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 19, 2025, 5:00 [IST]
English summary
Emotorad launches dope electric cycle in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+