35கிமீ-க்கு பெடல் யூஸ் பண்ணவே தேவையில்ல... விலையை கேட்டால் ஒன்றை புக் பண்ண தோணும்!
இந்தியாவின் நம்பகமான எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகளில் ஒன்றான இ-மோட்டோராட் (EMotorad) நிறுவனம், தனது பிரபலமான எக்ஸ்1 (X1) எலெக்ட்ரிக் சைக்கிளின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் புதிய வண்ணங்களுடன், எக்ஸ்1 இந்தியாவில் மலிவான மற்றும் நம்பகமான எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கான புதிய தரநிலைகளை தொடர்ந்து செட் செய்து வருகிறது.
இமோட்டோராடின் புதிய எக்ஸ்1 சைக்கிளில் 36 வோல்ட் 10.2 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முன்பு இருந்த 7.65 ஆம்பியர் பேட்டரிக்கு பதிலாக வந்துள்ளது. இந்த அப்டேட்டினால், பெடல் உதவியுடன் சைக்கிளை அதிகப்பட்சமாக சுமார் 35 கிமீ இருந்து 45 கிமீ-இல் வரை ஓட்டலாம். த்ரோட்டிலை பயன்படுத்தி மட்டும் அதிகப்பட்சமாக 35 கிமீ தொலைவிற்கு இந்த சைக்கிளில் பயணிக்க முடியும்.

மேலும், இந்த மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் சைக்கிள் ரூபி ரெட், ஆர்டிக் நீலம், ஃபாண்டோம் கிரே, ஸ்கை ப்ளூ ஃபயர்ஸ்ட்ரீம், பாலைவன பழுப்பு, மின்ட் கிரீன் பிளேஸ் என்கிற ஆறு புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சைக்கிளை தேர்வு செய்ய உதவுகிறது. அதே நேரத்தில் பசுமையான சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்திற்கும் வழிவகுக்கிறது.
உயர் வலிமை கொண்ட ஸ்டீல் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்1 எலெக்ட்ரிக் சைக்கிளில் 100 மிமீ-இல் டிராவல் கொண்ட முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் 27.5" x 2.1" என்கிற அளவுகளில் நைலான் டயர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை நகர சாலைகள் மற்றும் சீரற்ற பாதைகளில் கூட வசதியான மற்றும் நிலையான பயணத்தை உறுதி செய்கின்றன.
சிங்கிள்-ஸ்பீடு கியர் அமைப்பு, பேட்டரி இன்டிகேட்டர் டிஸ்பிளே மற்றும் 110 கிலோ வரை எடை தாங்கும் திறன் ஆகியவற்றுடன் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் அன்றாட பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்1 சைக்கிளின் விலை ரூ.27,999 ஆகும். இந்த விலை வரம்பில், அதிக அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட எலெக்ட்ரிக் சைக்கிள்களில் இது முதன்மையானதாக திகழ்கிறது.
புதிய எக்ஸ்1 அறிமுகம் குறித்து இ-மோட்டோராடின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ குனால் குப்தா கூறுகையில், "எக்ஸ்1 எலெக்ட்ரிக் சைக்கிளை மேம்படுத்துவதன் நோக்கம் தெளிவாக இருந்தது. எங்களது நோக்கம், எலெக்ட்ரிக் வாகனங்களை மேலும் அணுகக்கூடியதாகவும், நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கக் கூடியதாகவும், மேலும் சுவாரஸ்யமாகவும் மாற்றுவது ஆகும். எங்கள் சமூகத்தின் தேவைகளை நாங்கள் கேட்டறிந்தோம்."
"இந்தியாவில் மக்கள் எப்படி பயணம் செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தோம், அந்த தேவைகளுக்குப் பொருத்தமான ஒன்றை உருவாக்கினோம். ஸ்டைலாக மற்றும் அதே நேரத்தில் மலிவாகவும் நடைமுறைக்கு ஏற்ப இருக்க முடியும் என்பதை புதிய எக்ஸ்1 நிரூபிக்கிறது" என்றார். இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிளில் பயணம் செய்பவர்களின் உயரம் 5'3" முதல் 6'0" வரை இருக்க வேண்டும்.
சைக்கிளின் அடிப்படை சட்டகத்திற்கு 5 ஆண்டுகள் வாரண்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேம்படுத்தப்பட்ட எக்ஸ்1 எலெக்ட்ரிக் சைக்கிள் இப்போது அனைத்து இமோட்டோராட் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த சைக்கிளை ஆன்லைன் தளங்களிலும் புக் செய்து ஹோம் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இமோட்டோராட் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் சைக்கிள் பிராண்டாகும். இது உயர் செயல்திறன் கொண்ட, நிலையான எலெக்ட்ரிக்-வாகன தீர்வுகளை வழங்குகிறது. மலிவு விலை, புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியில் கவனம் செலுத்தி, நிலையான பயணத்தை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் நகர்ப்புற போக்குவரத்தின் எதிர்காலத்தை இமோட்டோராட் வடிவமைக்கிறது. அதன் ஒரு முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எக்ஸ்1 சைக்கிளில் பயணம் செய்பவர்கள் நீண்ட தூர, மென்மையான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications








