ஒரு தடவை பெட்ரோல் போட்டா எப்ப போட்டோம்னே தெரியாத அளவுக்கு ரொம்ப நாள் ஓடும் யமஹா பைக் வந்தாச்சு!

இந்திய டூவீலர் வாகன மார்கெட்டிற்கான ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாக, இந்திய யமஹா மோட்டார் (IYM) 2025 FZ-S Fi ஹைப்ரிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 150cc பிரிவில் நாட்டின் முதல் ஹைப்ரிட் பைக்காக இருக்கிறது. டெல்லியில் எக்ஸ்-ஷோரூம் விலை INR 1,44,800-ல் என விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதுமையான பைக், எரிபொருள் சிக்கனம், செயல்திறன் மற்றும் ஓட்டுநருக்கான வசதி ஆகியவற்றின் அடிப்படையில் அளவுகோலை உயர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 FZ-S Fi ஹைப்ரிட் அதன் 149cc ப்ளூ கோர் இன்ஜினால் தனித்து நிற்கிறது. இது OBD-2B தரங்களை பூர்த்தி செய்கிறது. யமஹாவின் சுற்றுச்சூழல் ஸ்டபிளிட்டிக்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இது ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) மற்றும் ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம் (SSS) ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது பேட்டரி-உதவியுடன் ஆக்ஸிலரேஸனை மேம்படுத்துகிறது.

Yamaha FZ-S Fi Hybrid

சாஃப்டான ஸ்டார்ட்டிங் மற்றும் ஐடிலில் இன்ஜினை தானாகவே நிறுத்தி குறைந்த கிளட்ச் செயலுடன் மீண்டும் ஸ்டார்ட் ஆவதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கிறது. இதனால் குறைவான பெட்ரோல் செலவு தான் ஆகும். இதனால் குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

பைக்கின் வடிவமைப்பு மிகவும் நவீன மற்றும் மென்மையான தோற்றத்திற்காக குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்றுள்ளது, இதில் ஷார்ப்பான டேங்க் கவர் எட்ஜ்கள், சீக்கொன்ஷியன் முன்பக்க டர்ன் சிக்னல்கள் மற்றும் ஒட்டுமொத்த ஏரோடைனமிக் வடிவமைப்பு ஆகியவை இதில் உள்ளது. ஒரு முக்கிய அம்சம் 4.2-இன்ச் முழு நிற TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் குழு, இது Y-Connect பயன்பாட்டின் மூலம் ஸ்மார்ட்போன்களுடன் சீராக ஒருங்கிணைக்கப்பட்டு, குறிப்பாக கூகிள் மேப்ஸிலிருந்து டிரைவர்களுக்கு டர்ன் பை டர்ன் நேவிகேஷனை வழங்குகிறது.

Yamaha FZ-S Fi Hybrid

எர்கோனோமிக்ஸில் அப்டேட்கள் மிக முக்கிமானது, நீண்ட தூர பயணங்களின் போது அதிகரித்த வசதிக்காக அப்டேட் செய்யபட்ட வடிவமைப்பிலான ஹேண்டில்பார் மற்றும் கவர் உடன் வருகிறது, இதனால் பயணிக்க பாதுகாப்பாக இருக்கும். ஏரோ டைமனிக் ஸ்டைலினால் பெட்ரோல் டேங்க் கவர்சேர்க்கப்படுவது பைக்கின் பிராக்கிடிக்கல் வடிவமைப்பை மேலும் வலியுறுத்துகிறது. ரேசிங் ப்ளூ மற்றும் சயன் மெட்டாலிக் கிரே ஆகிய கலர்களில் கிடைக்கும்.

"யமஹா மோட்டார் இந்தியா குழுவின் தலைவர் இட்டாரு ஓட்டானி, "எஃப்.ஜே. பிராண்ட் இந்தியாவில் யமஹாவின் பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த பிரிவில் ஹைப்ரிட் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாம் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மேம்பட்ட, டிரைவிங் அனுபவத்திற்காக புதுமைகளை கொண்டு வருவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதும். எஃப்.ஜே. தொடரில் உள்ள ஒவ்வொரு அப்டேட்டையும் வாடிக்கையாளர் நுண்ணறிவுகளால் வடிவமைக்கப்பட்டது. இது மிகவும் சுத்திகரிக்கப்பட்ட, இயக்கவியல் மற்றும் கவர்ச்சிகரமான டிரைவிங் அனுபவத்தை உறுதி செய்கிறது."

யமஹாவின் FZ-S Fi ஹைப்ரிட்டை அறிமுகப்படுத்துவது, இந்திய பைக்கில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கிறது. புதுமை மற்றும் வடிவமைப்பு மூலம் டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்துவதில் ஆர்வமான கவனத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நகர்வு 150cc பைக் பிரிவில் செயல்திறன் தரங்களை உயர்த்துவது மட்டுமல்லாமல், தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் இந்திய டிரைவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை வழங்குவதற்கான யமஹாவின் அர்ப்பணிப்புடன் இணைகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவது ஒரு பக்கம் மக்களிடம் வரவேற்ப்பை பெற்றாலும், மற்றொரு பக்கம் முதலில் நல்ல வாகனத்தை பெற அதிக பணம் கூட செலவு செய்ய மக்கள் ரெடியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மைலேஜ் தான் மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. அதை கணக்கிட்டு தான் இந்நிறுவனம் இந்த வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 11, 2025, 17:40 [IST]
English summary
Yamaha has launched the 2025 FZ-S Fi Hybrid, India's first hybrid motorcycle in the 150cc segment. Priced at INR 1,44,800, it features advanced technology, improved fuel efficiency, and modern design elements, enhancing the rider experience and underlining Yamaha's commitment to innovation.
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+