ஒரே இடத்தில் ரெண்டு இ-ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த கோதாவரி நிறுவனம்.. விலையும் ரொம்ப கம்மியா இருக்கு!
கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் (Godawari Electric Motors) நிறுவனம் இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாகவே மின்சார ஸ்கூட்டர்களை அது வெளியீடு செய்திருக்கின்றது.
தன்னுடைய இப்ளூ (eBlu) பிராண்டின்கீழே இரண்டு இ-ஸ்கூட்டர்களையும் அது வெளியீடு செய்துள்ளது. இப்ளூ ஃபியோ இசட் (Eblu Feo Z) மற்றும் இப்ளூ ஃபியோ டிஎக்ஸ் (Eblu Feo DX) ஆகியவையே அவை ஆகும். இரண்டில் ஒன்று குடும்ப பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

அது இப்ளூ ஃபியோ இசட் ஆகும். இரண்டாவது ஒன்றை ஸ்லோ மற்றும் ஸ்பீடு என்கிற இரண்டு விதமான ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இப்ளூ ஃபியோ டிஎக்ஸ், குடும்ப பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மட்டுமல்ல அது ஓர் மாடர்ன் லுக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் ஆகும்.
இதில் 4.2 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் 30 நிமிடங்களே போதுமானது. மேலும், இதை வீட்டு சார்ஜரில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். 1.2 kW சார்ஜர் இதற்காக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மின்சார மோட்டாரை பொருத்த வரை 5 kW மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுதவிர, பிரீமியம் அம்சங்களாக இந்த ஸ்கூட்டரில் 7 அங்கு டிஎஃப்டி திரையும், மூன்று விதமான ரைடிங் மோட்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இப்ளூ ஃபியோ டிஎக்ஸ் மாடலைபோலவே அதிகம் பிரீமியம் அம்சங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இ-ப்ளூ ஃபியோ இசட் மாடல் இருக்கின்றது.
இதில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 48V/ 30Ah பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட லித்தியம் மக்னீசியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பேக் ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 70 ஆயிரமும், ஃபியோ டிஎக்ஸ் மாடலுக்கு ரூ. 1 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. இதன் லுக்கில் விண்டேஜ் ஸ்டைலிலும், சிறப்பம்சங்கள் விஷயத்தில் மாடர்ன் லுக்கிலும் இருப்பதால் தனித்துவமான வரவேற்பை இது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








