இதுதான் சாக்குனு விலையை இன்னும் குறைச்சிட்டாங்க... 20 ஆயிரம் ரூபாய் ஒன்னும் சும்மா வரல!!
இந்தியாவின் எலக்ட்ரிக் மொபிலிட்டி துறையில் முன்னோடியாக விளங்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (GEML), தனது மேக்னஸ் நியோ (Magnus Neo) மற்றும் நெக்ஸஸ் (Nexus) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாடு தழுவிய பண்டிகைக் கால சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்டான மற்றும் நிலையான பயண அனுபவத்தை மக்கள் பெற முடியும்.
இந்த பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, GEML-ன் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் சிறப்புச் சலுகைகளுடன் வாங்கலாம். அதேநேரம், மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.12,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.20,000 வரை தள்ளுபடியில் வாங்கலாம்.

அத்துடன் ரூ.10,000 மதிப்புள்ள மேம்பட்ட அம்சங்கள் மற்றும் கனெக்டட் டெக்னாலஜிகளும் கூடுதலாக வழங்கப்படுகின்றன. க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் இந்தச் சலுகைகள் அமேசான் (Amazon) மற்றும் ஃபிளிப்கார்ட் (Flipkart) தளங்களிலும் கிடைக்கின்றன. இதன் மூலம் நிறுவனம் தனது தரமான, அம்சங்கள் நிறைந்த தயாரிப்புகளை மலிவு விலையில் வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது.
மேக்னஸ் மற்றும் நெக்ஸஸ் ஆகிய இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், இரட்டிப்பு பேட்டரி ஆயுளை வழங்கும் நம்பகமான லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி தொழில்நுட்பம் போன்ற நவீன அம்சங்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த சமநிலைப்படுத்தப்பட்ட பிரேக்குகள், போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ், மேப் மிரரிங் வசதியுடன் கூடிய கனெக்டட் டெக்னாலஜி, விசாலமான இருக்கை வசதி போன்ற அம்சங்கள் இந்திய சாலைகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன.

இது முழுமையான எலக்ட்ரிக் வாகன அனுபவத்தை வழங்குகிறது. க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் வழங்கப்படும் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி தொழில்நுட்பம், -40°C முதல் 60°C வரையிலான கடுமையான வெப்பநிலையிலும் சோதிக்கப்பட்டுள்ளது. அதிக வலிமை கொண்ட இரட்டை பிரேம் சேசிஸ், சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆம்ப்பெர் கேரின் 600க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் மூலம் நாடு முழுவதும் சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் க்ரீவ்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இது வாடிக்கையாளர்களுக்கு எல்லா நேரங்களிலும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை உறுதி செய்கிறது. நெக்ஸஸ் மற்றும் மேக்னஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நடைமுறைக்கு உகந்தவை மட்டுமல்லாமல், க்ரீவ்ஸ் நிறுவனத்தின் 165 வருட பொறியியல் பாரம்பரியம் மற்றும் 17 வருட எலக்ட்ரிக் வாகன நிபுணத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், சிறந்த செயல்திறன் மற்றும் ஆயுளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தனது பொறியியல் திறனை வெளிப்படுத்தும் வகையில், க்ரீவ்ஸ் நிறுவனம் 8 இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது அதன் எலக்ட்ரிக் வாகனங்களின் நம்பகத்தன்மை மற்றும் சிறப்பம்சங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது. க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் 370க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள், 600க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் (e-commerce) தளங்களில் இந்த பண்டிகைக் காலச் சலுகைகள் கிடைக்கின்றன.
இது ஸ்மார்ட் மொபிலிட்டி அணுகலை எளிதாக்குவதிலும், தூய்மையான, நம்பகமான மின்சார வாகனங்களை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கச் செய்வதிலும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. க்ரீவ்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆம்பியர் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.85 ஆயிரமாக உள்ளது. அதேநேரம், நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,27,840 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் நல்லப்படியாக வளர்ந்து இருப்பதற்கு காரணங்களுள் க்ரீவ்ஸ் நிறுவனத்தின் ஆம்பியர் பிராண்டும் ஒன்றாகும். இத்தகைய நிறுவனத்தில் இருந்து சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால், வரும் மாதங்களில் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









