ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு ஆப்பு! கம்மி ரேட்ல ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வரப்போகுது!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த விலையில் என்ட்ரி லெவல் பைக்காக "ஸ்பிரின்ட்" என்ற பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த பைக் இந்தாண்டு இறுதிக்குள் வெளியிடப்பட்டு அடுத்தாண்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தற்போது குறைந்த விலையில் ஒரு பைக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசினார். இது குறித்து அவர் கூறும்போது குறைந்த விலையில் பைக்குகளை தயாரிக்க தனி ஃபிளாட்ஃபார்மை அந்நிறுவனம் உருவாக்கியிருப்பதாகவும் அதன் மூலம் ஏராளமான குறைந்த விலை பைக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

harley davidson affordable bike

Images Are Representative purpose only

இதில் முதல் பைக்காக "ஸ்பிரின்ட்" என்ற பைக் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதலே இந்த பெயர் அடிபட்ட வரும் நிலையில் ஒர வழியாக இந்த பெயரை ஒரு பைக்கிற்கு அந்நிறுவனம் வைத்துள்ளது. இந்த பைக் சர்வதச மார்கெட்டில்களில் அறிமுகமாகும். குறிப்பாக அமெரிக்க மார்கெட்டை குறி வைத்து தயாரிக்கப்படுகிறது.

இந்த பைக் வரும் 2026ம் ஆண்டு தான் விற்பனைக்க வரும் என்றால் இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள EICMA கண்காட்சியில் இந்த பைக் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் சர்வதேச மார்கெட்டில் குறிப்பாக அமெரிக்காவில் 6000 அமெரிக்க டாலர் என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ5.23 லட்சம் ஆகும்.

harley davidson affordable bike

Images Are Representative purpose only

இந்த பைக் குறைந்த விலையில் விற்பனையாவதால் உலகில் பலர் இந்த பைக்கை வாங்க வாய்புள்ளது. இது மட்டுமல்லாமல் ஹார்லிடேவிட்சனின் இந்த முயற்சி லாபகரமாகவும், இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகவும் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்பிரின்ட் பைக் குறித்த மற்ற விரபங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஃபிளாட்ஃபார்மில் இந்நிறுவனம் இரண்டாவதாக க்ரூஸர் பைக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த பைக்கும் 2026ம் ஆண்டே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் தன் வசம் ஈர்க்க இந்த பைக்குகளை தயாரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

harley davidson affordable bike

Images Are Representative purpose only

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த விலையில் பைக்குகளை தயாரிப்பது இது ஒன்றும் முதல் முறை இல்லை. இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு ஸ்டிரீட் 750 என்ற பைக்கை இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்தது. ஆனால் இந்த பைக் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையை பெறவில்லை. இந்தியாவில் ஹார்லிடேவிட்சன் நிறுவனத்தின் க்ரூஸர் பைக்குகள் தான் சிறப்பாக விற்பனையாகிறது. இந்த ரக பைக் இந்தியா வந்தால் நன்றாக விற்பனையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹார்லிடேவிட்சன் நிறுவனத்தின் ஸ்பிரின்ட் பைக் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், இந்தியாவில் இந்நிறுவனம் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ்440 என்ற பைக்கை வெறும் ரூ2.39 லட்சத்திற்கு விற்பனை செய்து வரும் நிலையில் இந்த பைக் ஸ்பிரின்ட் பைக் அதை விட காஸ்ட்லியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பைக் இந்தியா வருமா என்பது சந்தேகம் தான். இதையும் மீறி மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தால் ராயல் என்ஃபீல்டு மார்கெட்டை ஹார்லி நிறுவனம் பிடித்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 4, 2025, 9:00 [IST]
English summary
Harley davidson affordable bike new entry level launch details
மேலும்... #harley davidson
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X