ஹார்லி-டேவிட்சன் இந்தியாவை விட்டு போய்ட்டதா சொன்னாங்க.. புது பைக்குகள் ஒவ்வொன்றின் விலையிலும் காரை வாங்கிடலாம்

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் புதிய ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. என்னது ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்கிறதா என உங்களில் சிலருக்கு கேள்வி எழலாம். ஆமாங்க... ஹீரோ நிறுவனம் தான் அறிமுகம் செய்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பே இந்தியாவை விட்டு சென்ற பிரபல அமெரிக்க பைக் நிறுவனமான ஹார்லி-டேவிட்சனின் செயல்பாடுகளை கடந்த சில வருடங்களாகவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான் கவனித்து வருகிறது. ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்வது, ஏற்கனவே விற்கப்பட்ட பைக்குகளுக்கும் இனி விற்க போகும் பைக்குகளுக்கும் சர்வீஸ்களை வழங்குவது உள்ளிட்டவற்றை ஹீரோ நிறுவனம் தான் கவனிக்கிறது.

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹார்லி-டேவிட்சன் பைக்குகளாவன, 2025 ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் (Nightster) மற்றும் நைட்ஸ்டர் ஸ்பெஷல் (Special) ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.13.51 லட்சம் மற்றும் ரூ.14.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

2025 harley davidson nightster bikes

இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் பைக்குகள் கடந்த பல வருடங்களாகவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அவை 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய நைட்ஸ்டர் பைக்குகளில் முக்கியமான அம்சமாக மாடர்ன் தரத்திலான என்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்ப வசதிகள் அப்டேட்களாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த வகையில், புதிய 2025 ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் பைக்குகளில் 975சிசி லிக்யுடு-கூல்டு வி-ட்வின் மேக் 975டி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 89.7 எச்பி மற்றும் 95 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. பொதுவாக, இவ்வாறான ஆற்றல்மிக்க என்ஜினை கொண்ட பைக்குகள் தினந்தோறும் பயன்படுத்த முடியாத அளவிற்கு நன்கு பவர்ஃபுல்லானவை ஆக இருக்கும்.

2025 harley davidson nightster bikes

ஆனால், புதிய நைட்ஸ்டர் பைக்குகளில் ரைடிங் அனுபவம் மற்றும் அதிகப்படியான ஆற்றல் என இரண்டும் ஒருசேர கலந்துள்ளது. நைட்ஸ்டர் பைக்குகளின் தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான மாற்றம் என்னவென்றால், பைக்கின் இருக்கைக்கு அடியில் பெட்ரோல் டேங்க் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கமான பெட்ரோல் டேங்க் பகுதியில் வழக்கம்போல் நீர்த்துளி வடிவில் டேங்க் ஒன்று இருப்பதை காணலாம்.

இந்த கிளாசிக்கான நீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் தான் நைட்ஸ்டர் பைக்குகளின் அடையாளம் என்பதால் அவற்றை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் மாற்றவில்லை. ஆனால், அவை புதிய நைட்ஸ்டர் பைக்குகளில் பெட்ரோல் டேங்க்காக இல்லாமல், ஏர்பாக்ஸ் (Airbox) கொண்ட பகுதியாக உள்ளது. இந்த வகையில், வழக்கத்தை காட்டிலும் பெட்ரோல் டேங்க் கீழே இறங்கியுள்ளதால், பைக்கின் ஈர்ப்பு மையம் கீழே இறங்கியுள்ளது.

இதன் மூலமாக பைக்கின் ஹேண்ட்லிங் மற்றும் ஸ்டெபிளிட்டி மேம்பட்டு இருப்பதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவிக்கிறது. இத்தகைய பைக் அமைப்பு சிலருக்கு அசவுகரியமாக இருக்கலாம் என்றாலும், பைக்கின் தோற்றம் மாடர்ன் தரத்திற்கு மாறியுள்ளது. இதற்கேற்ப பைக்கின் ஹேண்டில்பார் 5-இன்ச் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, க்ரூஸர் பைக்குகள் போன்றதான சவுகரியமான ரைடிங் பொசிஷனை பைக்கை ஓட்டும் ரைடர் பெறலாம்.

இவற்றுடன், பின் இருக்கை மற்றும் அதில் அமர்பவர்கள் கால் வைத்துக் கொள்ள ஃபுட்பெக்ஸ் (Footpegs) உள்ளிட்டவையும், ஹெட்லைட் சுற்றி அலங்காரமும் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்காற்றில் பைக் இயங்கும் திறன் மேம்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control), ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் 10.2 செ.மீ-இல் டிஎஃப்டி (TFT) திரை, யுஎஸ்பி சார்ஜிங் வசதி மற்றும் பயணத்திற்கு தேவையான வழிக்காட்டுதல் உள்ளிட்ட அம்சங்களும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு சென்ற போதிலும், இன்னமும் நம் நாட்டில் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளுக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலிலும், நைட்ஸ்டர் பைக்குகள் உலகளவில் பிரபலமானவை ஆகும். இத்தகைய பைக்குகள் தான் புதிய தோற்றத்தில், புதிய தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் களமிறக்கப்பட்டு உள்ளன. இவை இந்தியர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 22, 2025, 5:00 [IST]
English summary
Harley davidson launches new 2025 nightster bikes in india check all details here
மேலும்... #harley davidson #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+