பைக் பார்க்கவே மெர்சலா இருக்கு... விலையை மட்டும் கம்மியா நிர்ணயித்தால் விற்பனை பிச்சிக்கும்!!

ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) நிறுவனம் தனது இரண்டாவது நியோ-ரெட்ரோ (Neo-retro) ரக மோட்டார்சைக்கிளாக 'எக்ஸ்440டி' (X440T)-ஐ இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது. அதாவது, விலையை தவிர்த்து பைக்கை பற்றிய மற்ற விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

புதிய வடிவமைப்பு ஹைலைட்கள் & மேம்பட்ட வசதிகள்: புதிய ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440டி பைக்கின் பின் பகுதி புதிதாக வடிவமைக்கப்பட்டு, நீளமான சீட் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது நீண்ட தூர பயணங்களின்போது பின் இருக்கை பயணிகளுக்கு அதிக சௌகரியத்தை வழங்கும். வழக்கமான கண்ணாடிகளுக்குப் பதிலாக பார்-எண்ட் மிரர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

harley-davidson x400t motorcycle unveiled

இது எக்ஸ்440டி பைக்கில் மேலும் ஸ்போர்ட்டியான தோற்றமளிக்கிறது. இது நான்கு புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் உடன் கிடைக்கிறது. இதன் எக்ஸாஸ்ட் அமைப்பும் அழகியல் மேம்பாட்டிற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி, பைக்கின் மற்ற பாகங்கள் அனைத்தும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்440 பைக்கைப் போலவே உள்ளன.

உயர் தொழிற்நுட்ப அம்சங்கள்: எக்ஸ்440டி கேபிள்களுக்கு பதிலாக அதிநவீன 'ரைட் பை வயர்' (Ride-by-Wire) தொழில்நுட்பத்தை இந்த பைக் பயன்படுத்துகிறது. இதன் மூலம் டிராக்‌ஷன் கண்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோட்கள் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் (ABS) போன்ற எலெக்ட்ரானிக் அம்சங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சங்கள் சிறந்த பைக் ரைடிங் அனுபவத்தை வழங்கும்.

harley-davidson x400t motorcycle unveiled

சக்திவாய்ந்த என்ஜின் & சஸ்பென்ஷன்: பைக்கின் முன்புற வடிவமைப்பை போலவே, புதிய எக்ஸ்440டி பைக்கிலும் எக்ஸ்440 பைக்கின் வழக்கமான அதே 440சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27 பிஎச்பி ஆற்றலையும், 38 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியது ஆகும்.

இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்கு, பைக்கின் முன்பக்கத்தில் 43 மிமீ KYB USD ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 7-ஸ்டெப் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பிரேக்கிற்கு முன் சக்கரத்தில் 320மிமீ-லும், பின் சக்கரத்தில் 240மிமீ-லும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

harley-davidson x400t motorcycle unveiled

டிஜிட்டல் தொடர்பு & பாதுகாப்பு: எக்ஸ்440டி பைக்கில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சிக்னேச்சர் DRL-கள், எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 3.5 இன்ச் TFT டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த TFT டிஸ்ப்ளே மூலமாக ஒவ்வொரு திருப்புதலுக்கும் தேவையான வழிக்காட்டுதல், மியூசிக் கண்ட்ரோல், புளூடூத் இணைப்பு, மொபைல் போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ் எச்சரிக்கைகள் உடன் பைக்கின் மைலேஜ், சைடு ஸ்டாண்ட் அலெர்ட் மற்றும் அழைப்புகளை ஏற்க/மறுக்க போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தலாம்.

harley-davidson x400t motorcycle unveiled

விலை & கிடைக்கும் தன்மை: தற்சமயம் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.39 லட்சம் ஆகும். எக்ஸ்440டி கூடுதல் அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் வருவதால், இதன் விலை சுமார் ரூ.2.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹீரோ பிரீமியா (Hero Premia) மற்றும் ஹார்லி-டேவிட்சன் ஷோரூம்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டாண்டர்ட் எக்ஸ்440 பைக்கில் உள்ள அதே என்ஜின் உடன் வந்தாலும், புதிய எக்ஸ்440டி புதுமையான ஸ்டைலிங், கிராபிக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு அம்சங்களுடன் தனித்து நிற்கிறது. ஆதலால், எக்ஸ்440 பைக்கை போன்று புதிய எக்ஸ்440டி பைக்கும் இந்தியாவில் கணிசமான வாடிக்கையாளர்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 2, 2025, 0:00 [IST]
English summary
Harley davidson x440t unveiled design features expected price check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X