ஸ்போக் கம்பிகள் மட்டுமல்ல பெடலும் இல்லை.. மோடி வெறிக்க வெறிக்க பார்த்த சிவப்பு நிற சைக்கிள்..
யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு மிக சிறப்பாக 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' நடந்து முடிந்திருக்கின்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த வாகன கண்காட்சியில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை வாகன ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர். ஜனவரி 17 தொடங்கி ஜனவரி 22 வரை இந்த ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற்றது. பிரதமர் மோடி-யே இதனைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த சில முக்கிய வாகனங்களை அவர் கண்டு ரசித்தார். அந்தவகையில், அவர் பார்த்ததில் ஒரு சில வாகனங்கள் அவரின் கவனத்தை வெகுவாக கவர்ந்தன.
மிக முக்கியமாக ஹெலென் பைக்ஸ் (Helen Bikes) நிறுவனத்தின் ஸ்டாலில் சிவப்பு நிறத்தில் நின்றுக் கொண்டிருந்த சைக்கிள் ஒன்று பிரதமர் மோடியின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவர்ந்தது என்றே கூறலாம். காரணம் அந்த சைக்கிளின் தனித்துவமான தோற்றம் ஆகும். சைக்கிள் என்றாலே பெடல், பெல் மற்றும் ஸ்போக் கம்பிகளைக் கொண்ட வீல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ஆனால், இந்த சைக்கிள் இந்த அம்சங்கள் எதையும் பார்க்க முடியாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் வழக்கமான சைக்கிள்கள்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் அது இருக்கும். இந்த ஸ்டைலை பிரதமர் மோடியை ஆச்சரியத்துடன் அந்த சைக்கிளைப் பார்க்கச் செய்தது.
சொல்லப் போனால் ஹெலன் நிறுவனம் தயாரித்திருக்கும் அந்த இ-சைக்கிளில் மிதிப்பதற்கான பெடல்கூட வழங்கப்படவில்லை. மேலும், வீல்களில் இருக்கக் கூடிய ஸ்போக் கம்பிகளும் அதில் இடம் பெறவில்லை. அத்துடன், சைக்கிள் செயின் மற்றும் ஸ்பிராக்கெட் போன்ற அம்சங்களும் அதில் இடம் பெறாததை நம்மால் காண முடிகின்றது.

இத்தகைய ஓர் மாறுபட்ட ஸ்டைலில் நின்றுக் கொண்டிருந்த காரணத்தினாலேயே அந்த சைக்கிளையே பிரதமர் ஆச்சரியத்துடன் பார்த்தார். அவர் மட்டுமல்ல பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் கலந்துக் கொண்டு பெரும்பாலானோர் அந்த சைக்கிளை வியப்புடனேயே பார்த்தனர். இது ஓர் எலெக்ட்ரிக் சைக்கிள் ஆகும். முழுவதும் மின்சாரத்தில் மட்டுமே இயங்கும்.
ஹெலக்ஸ் (Helex) எனும் பெயரே இந்த இ-சைக்கிளுக்கு சூட்டப்பட்டு இருக்கின்றது. இது முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கக் கூடிய சைக்கிள் என்பதாலேயே பெடல், ஸ்பிராக்கெட் மற்றும் செயின் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக சைக்கிளின் வீலை இயக்கும் விதமாக நேரடியாக மோட்டார்கள் வீல்களுடனேயே இணைக்கப்பட்டு இருக்கின்றன.

அது அந்த வீலையும் தாங்கி பிடித்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அந்த வீல்களில் ஸ்போக் கம்பிகள் வழங்கப்படுவதற்கான அவசியமும் அகற்றப்பட்டு இருக்கின்றது. இதுபோலே, முன் வீலும் உள்ளது. ஆனால், அதில் மின்சார மோட்டார்கள் வழங்கப்படவில்லை. தொடர்ந்து, பிரத்யேக சஸ்பென்ஷன் ஒன்றும் இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
அது சைக்கிள் ரைடை சுவாராஷ்யமானதாக மாற்ற உதவியாக இருக்கும். இந்த சைக்கிளை சிறியவர்கள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் ஓட்ட முடியும். இத்தகைய இலகுவான சைக்கிளாகே அது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், இ-சைக்கிள் பற்றிய எந்தவொரு தகவலையும் ஹெலன் பைக்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.
தயாரிப்பு பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை என கூறப்படுகின்றது. அதேவேளையில், விரைவில் ஹெலக்ஸ் விற்பனைக்கு வந்துவிடும் என்றும், அதுபற்றிய அதன் அனைத்து முக்கிய விபரங்களும் சீக்கிரமே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், இப்போதே இந்த இ-சைக்கிளின் பலரின் கவனத்தைக் கவர தொடங்கிவிட்டது.
குறிப்பாக, பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 கலந்துக் கொண்ட வாகன ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக இது ஈர்த்திருக்கின்றது. முக்கியமாக பிரதமர் மோடியை இந்த வாகனம் மிகப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். ஆகையால், சீக்கிரமே பிரதமர் மோடி இந்த சைக்கிள் பயன்பாட்டாளர் ஆகினாலும் சந்தேகப்பட ஒன்றுமில்லை.
உலகின் முதல் ஸ்போக் இல்லாத முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை தயாரிக்கும் நிறுவனமே ஹெலன். இந்த நிறுவனம் தங்களுடைய தயாரிப்புகளை மேலும் மேம்பட்டதாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. விரைவிலேயே ஹெலக்ஸ் இ-சைக்கிள்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சைக்கிளில் டச் ஸ்கிரீன் போன்ற அட்வான்ஸ்டு அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கே சவால் விடும் வகையில் இந்த ஹெலக்ஸ் இ-சைக்கிளின் வருகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலையும் சற்று காஸ்ட்லியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications









