கார்களையே தூக்கி சாப்பிட போகும் புதிய ஹீரோ பைக்! விலை இவ்ளோதானா! டிவிஎஸ், ஹோண்டா சோலி முடின்ச்!

இந்தியாவின் 125 சிசி செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ க்ளாமர் (Hero Glamour). இதன் புதிய வெர்ஷன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்த புதிய பைக் குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பைக், ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் (Hero Glamour 125 X) என்ற பெயரில் அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் தமிழன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவின்படி பார்த்தால், ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக்கில்,க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படவுள்ளது.

Hero Glamour 125

இது கார்களில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு வசதி ஆகும். அதே நேரத்தில் மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் பைக்குகளிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவின் 125 சிசி செக்மெண்ட்டை சேர்ந்த பைக் ஒன்றில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

அத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக்குகளில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை கொண்டுள்ள முதல் பைக் என்ற பெருமையையும், ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பெறவுள்ளது. இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Hero Glamour 125 Side View

க்ரூஸ் கண்ட்ரோல் தவிர, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250 (Hero Xtreme 250) பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே முழு டிஜிட்டல் கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வசதியையும், ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக் பெறவுள்ளது. அத்துடன் எல்இடி ஹெட்லேம்ப் வசதியையும் ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக்கில் நாம் எதிர்பார்க்கலாம்.

இவை எல்லாம் தவிர, ஈக்கோ, ரோடு மற்றும் பவர் என ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக்கில், 3 ரைடிங் மோடுகளும் (Riding Modes) வழங்கப்படவுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் ஆப்ஷனை, ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக் கொண்டிருக்கும்.

அதிகபட்சமாக 10.7 பிஹெச்பி பவர் மற்றும் 10.6 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக்கின் விலை 95 ஆயிரம் - 1 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். புதிய ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக் இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில், டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125) மற்றும் ஹோண்டா சிபி125 ஹார்னெட் (Honda CB125 Hornet) ஆகிய பைக்குகளுக்கும் எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை, புது வரவான ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கம்யூட்டர் ரக பைக்கில், க்ரூஸ் கண்ட்ரோல் வசதி என்பதால், ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விலையை மட்டும் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், ஹீரோ க்ளாமர் 125 எக்ஸ் பைக், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, August 17, 2025, 16:17 [IST]
English summary
Hero glamour 125 x launch soon check all details here
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+