யார் கண்ணு பட்டுச்சோ தெரில! காத்து வாங்கும் ஹீரோ ஷோரூம்கள்! போட்டி நிறுவனங்களுக்கு இப்ப குளுகுளுன்னு இருக்கும்
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர்களில் ஒன்று ஹீரோ க்ளாமர் (Hero Glamour). வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றாலும் கூட, நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் ஹீரோ க்ளாமர் பைக் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், 911 ஹீரோ க்ளாமர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், 19,028 ஹீரோ க்ளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 205ம் ஆண்டு மே மாதத்தில், 18,117 ஹீரோ க்ளாமர் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 95.21 சதவீத வீழ்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியில் ஒப்பிட்டாலும் கூட, ஹீரோ க்ளாமர் பைக் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது.
அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 4,941 ஹீரோ க்ளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன்பின் வந்த மே மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வெறும் 911 ஹீரோ க்ளாமர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், 4,030 ஹீரோ க்ளாமர் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 81.56 சதவீத வீழ்ச்சி ஆகும். இது இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள 125 சிசி பைக்குகளில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ க்ளாமர் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 84,698 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 90,698 ரூபாயாக இருக்கிறது.
மறுபக்கம் இதன் எக்ஸ்டெக் (XTEC) மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 89,998 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 94,598 ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஹீரோ க்ளாமர் மற்றும் அதன் எக்ஸ்டெக் ஆகிய 2 மாடல்களிலும், 124.7 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125), ஹோண்டா ஷைன் (Honda Shine), டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125) மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) போன்ற பைக்குகள் உடன், ஹீரோ க்ளாமர் பைக் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: க்ளாமர் பைக் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு 125 சிசி பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








