கார்ல இருக்கற வசதியை எல்லாம் விலை குறைவான பைக்கில் வாரி வழங்கிய ஹீரோ! ஹோண்டா, டிவிஎஸ் வெடவெடத்து போயிருக்கும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ க்ளாமர் (Hero Glamour). இந்த ஸ்டைலான கம்யூட்டர் ரக பைக்கின் (Stylish Commuter Bike) நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 25,014 க்ளாமர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய, அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 28,823 ஹீரோ க்ளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன்பின் வந்த நவம்பர் மாதத்தில், 3,809 ஹீரோ க்ளாமர் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஹீரோ க்ளாமர் பைக், விற்பனையில் 13.22 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ஹீரோ க்ளாமர் பைக், விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், வெறும் 12,145 ஹீரோ க்ளாமர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், நாங்கள் இந்த செய்தியில் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 25,014 ஹீரோ க்ளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 12,869 ஹீரோ க்ளாமர் பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. எனவே இந்த வகையில் பார்த்தால், ஹீரோ க்ளாமர் பைக், விற்பனையில் 105.96 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்திய சந்தையில் ஹீரோ க்ளாமர் பைக் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஹீரோ க்ளாமர், ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் (Hero Glamour XTEC) மற்றும் ஹீரோ க்ளாமர் எக்ஸ் (Hero Glamour X) ஆகியவை ஆகும்.
இவை மூன்றுமே 125 சிசி செக்மெண்ட்டை சேர்ந்தவைதான். இதில், ஹீரோ க்ளாமர் பைக்கின் விலை 81,063 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் பைக்கின் ஆரம்ப விலை 84,106 ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் ஹீரோ க்ளாமர் எக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 82,967 ரூபாயாக உள்ளது.
இவை அனைத்துமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதில், ஹீரோ க்ளாமர் எக்ஸ் பைக் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதில், கார்களில் இருப்பதை போன்ற க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன. இந்த செக்மெண்ட்டிலேயே க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை முதல் முறையாக பெற்ற பைக் இதுதான் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. க்ரூஸ் கண்ட்ரோல் மட்டுமல்லாது, ரைடிங் மோடுகள் உள்ளிட்ட வசதிகளையும் இது கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125), ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125), டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125) மற்றும் பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹீரோ க்ளாமர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








