கார்களையே தூக்கி சாப்பிடும் ஹீரோ பைக்... விலை இவ்ளோதானா! சேல்ஸ் அப்படியே டபுள் ஆயிருச்சு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கம்யூட்டர் ரக பைக்குகளில் (Commuter Bikes) ஒன்று ஹீரோ க்ளாமர் (Hero Glamour). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 30,140 ஹீரோ க்ளாமர் பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த எண்ணிக்கை, வெறும் 19,831 ஆக மட்டுமே இருந்தது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 10,309 ஹீரோ க்ளாமர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹீரோ க்ளாமர் பைக் விற்பனையில் 51.98 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
அத்துடன் இதன் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes September 2025), ஹீரோ க்ளாமர் பைக் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில், முதல் 9 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், பஜாஜ் பிளாட்டினா, டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் ரைடர், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ஹோண்டா சிபி யூனிகார்ன் ஆகிய பைக்குகள் உள்ளன.
ஹீரோ க்ளாமர் பைக்கானது, தற்போதைய நிலையில், க்ளாமர், க்ளாமர் எக்ஸ் மற்றும் க்ளாமர் எக்ஸ்டெக் என மொத்தம் 3 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹீரோ க்ளாமர் பைக்கின் இந்த மூன்று மாடல்களுமே 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டவைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதில், ஹீரோ க்ளாமர் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 81,063 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 84,751 ரூபாய் ஆகவும் உள்ளது. மறுபக்கம் ஹீரோ க்ளாமர் எக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 82,967 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 92,186 ரூபாய் ஆகவும் உள்ளது.
அதே நேரத்தில் ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 84,106 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 88,346 ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ க்ளாமர் எக்ஸ் பைக்கில், கார்களில் இருப்பதை போன்ற க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை கொண்டுள்ள இந்தியாவின் விலை குறைவான பைக்குகளில் ஒன்று என்ற பெருமையை ஹீரோ க்ளாமர் எக்ஸ் பெறுகிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக வசதிகளை கொண்டுள்ள ஒரு 125 சிசி பைக்கை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








