வேணுங்கற ஸ்பீடை செட் பண்ணீட்டா அதுவே போகும்! அடிமாட்டு விலையில் களமிறங்கிய ஹீரோ பைக்! மார்க்கெட் அதிர போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 (Hero Glamour X 125). வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சற்று நேரத்திற்கு முன்பு ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக்கில், 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,250 ஆர்பிஎம்மில் 11.4 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 10.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதி வழங்கப்படவுள்ளதாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் மூலம் இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
க்ரூஸ் கண்ட்ரோல் வசதியின் மூலம், ஒரு குறிப்பிட்ட வேகத்தை 'செட்' செய்து விட்டு, தொடர்ந்து அதே வேகத்தில் பயணம் செய்ய முடியும். ஆக்ஸலரேட்டரை முறுக்க தேவையில்லை. அதாவது 60 கிலோ மீட்டர் வேகத்தை 'செட்' செய்து விட்டால், பைக் தொடர்ந்து அதே வேகத்தில் பயணம் செய்யும். இதன் மூலம் மைலேஜ் (Mileage) அதிகரிக்கும் என்பதுடன், உங்கள் கைகளுக்கும் சற்று ஓய்வு கிடைக்கும்.

இது கார்கள் மற்றும் மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் பைக்குகளில் மட்டுமே வழங்கப்படும் ஒரு வசதி ஆகும். ஆனால் 125 சிசி செக்மெண்ட்டில் முதல் முறையாக ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக்கில் தற்போது க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக்கின் போட்டி நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக வரும் காலங்களில் 125 சிசி செக்மெண்ட்டை சேர்ந்த நிறைய பைக்குகளில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை நம்மால் எதிர்பார்க்க முடியும். க்ரூஸ் கண்ட்ரோல் தவிர, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உடன், கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வசதியையும், ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக் பெற்றுள்ளது.
அத்துடன் முழு எல்இடி லைட்கள், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகிய வசதிகளையும் (Features), ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக் கொண்டுள்ளது. மேலும் ஈக்கோ, ரோடு மற்றும் பவர் என மொத்தம் 3 ரைடிங் மோடுகள் (Riding Modes) இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், மிகவும் கவர்ச்சிகரமாகவும் ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக் டிசைன் (Design) செய்யப்பட்டுள்ளது. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும். இந்த பைக் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அவை ட்ரம் மற்றும் டிஸ்க் ஆகியவை ஆகும். இதில் ட்ரம் வேரியண்ட், மேட் மேக்னடிக் சில்வர் மற்றும் கேண்டி பிளாசிங் ரெட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். அதே நேரத்தில் டிஸ்க் வேரியண்ட், மெட்டாலிக் நெக்ஸஸ் ப்ளூ, ப்ளாக் டீல் ப்ளூ மற்றும் ப்ளாக் பியர்ல் ரெட் என்று மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஆக மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில், ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக்கின் ட்ரம் வேரியண்ட்டின் விலை வெறும் 90 ஆயிரம் ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டிஸ்க் வேரியண்ட்டின் விலை 1 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக் கருதப்படுகிறது. இந்த பைக்கிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஹீரோ டீலர்ஷிப்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாக முன்பதிவுகளை செய்ய முடியும். அதே நேரத்தில் டெலிவரி (Delivery) பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம். அதிநவீன வசதிகள் நிரம்பிய, அதே நேரத்தில் விலை குறைவான ஒரு 125 சிசி பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








