1 லட்ச ரூபாயில் எந்த பைக்கை வாங்குவது என்பது தான் இங்க குழப்பமே! ஹீரோவின் புதிய பைக் வேற லெவல்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் கிளாமர் எக்ஸ் (Glamour X) பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மார்க்கெட்டில் பிரபலமான ஹீரோ கிளாமர் பைக்கின் புதிய வெர்சனாக கிளாமர் எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் 125சிசி பைக்குகள் பிரிவில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தும் முயற்சியாக கிளாமர் எக்ஸ் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் களமிறக்கி உள்ளது.

இந்திய 2-வீலர்கள் மார்க்கெட்டில் பலத்த போட்டி மிகுந்த பிரிவில் கிளாமர் எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த புதிய ஹீரோ பைக்கிற்கு டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் 125 (Rider 125) பைக் போட்டியாக உள்ளது. புதிய கிளாமர் எக்ஸ் பைக்கிற்கும், டிவிஎஸ் ரைடர் பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

hero glamour x vs tvs raider 125

தொழிற்நுட்ப அம்சங்கள்: இந்தியாவிலேயே முதல் 125சிசி பைக்காக க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதி உடன் கிளாமர் எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக, க்ரூஸ் கண்ட்ரோல் ஆனது விலையுயர்ந்த பைக்குகளில் தான் வழங்கப்படுவது வழக்கம். இதுமட்டுமின்றி, ரைடு மோட்களும் இந்தியாவிலேயே முதல் 125சிசி பைக்காக புதிய கிளாமர் எக்ஸ் பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன.

இவை மட்டுமின்றி, அவசர கால பிரேக் அலார்ட், ரைடு-பை-வயர் டெக்னாலஜி உடன் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக் ரைடு அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் கிளாமர் எக்ஸ் பைக்கில் பிரத்யேகமாக வழங்கப்பட்டு உள்ளன. மறுப்பக்கம், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் 99 வசதிகளை வழங்கக்கூடிய வண்ண டிஎஃப்டி கன்சோல் ரிவர்ஸ் எல்சிடி திரை வழங்கப்படுகிறது.

hero glamour x vs tvs raider 125

இந்த எல்சிடி திரை ஆனது ரைடர் 125 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுவதில்லை என்றாலும், குறிப்பிட்ட விலைமிக்க வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இந்த டிவிஎஸ் பைக்கிலும் ஈக்கோ, பவர் மற்றும் பூஸ்ட் என வேறு விதமான ரைடு மோட்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கை போலவே, டிவிஎஸ் ரைடர் பைக்கிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

செயல்படுதிறன் & விலை: ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கில் பொருத்தப்படும் 124.7சிசி ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 11.55 பிஎஸ் மற்றும் 10.4 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் பொருத்தப்படும் 124.8சிசி ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 11.38 பிஎஸ் மற்றும் 11.75 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

hero glamour x vs tvs raider 125

ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கில் 18 இன்ச்சிலும், டிவிஎஸ் ரைடர் பைக்கில் 17 இன்ச்சிலும் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. முன் டயரின் அளவு இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பின் டயரின் அளவு வேறுப்படுகிறது. அதேபோல் சஸ்பென்ஷனுக்கு இரு பைக்குகளிலும் முன்பக்கத்திலும் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்படும் நிலையில், பின்பக்க சஸ்பென்ஷனுக்கு மட்டும் கிளாமர் எக்ஸ் பைக்கில் ட்யூயல்-ஷாக் அப்சார்பர்களும், ரைடர் 125 பைக்கில் வாயு மூலமாக செயல்படக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்படுகிறது.

இந்த 125சிசி பைக்குகள் இரண்டும் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட்களில் கிடைக்கின்றன. புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.89,999இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதேநேரம், ரைடர் 125 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.99,999இல் இருந்து ஆரம்பிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகமாக தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டு செல்லக்கூடியதாக இல்லாத, அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இத்தகைய 125சிசி பைக்குகள் ஏற்றவையாக இருக்கும். மேலும், இந்த பைக்குகள் இரண்டும் இன்றைய கால மாடர்ன் தரத்தில் தோற்றம் கொண்டவை ஆகும். இருப்பினும், இந்த இரண்டில் எதை வாங்குவது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 23, 2025, 5:00 [IST]
English summary
Hero glamour x vs tvs raider check 125cc bikes comparison here
மேலும்... #hero motocorp #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X