70 கி.மீ மைலேஜ் தரும்! விலை வெறும் ரூ 59 ஆயிரம் தான்! இந்த பைக்கை பத்தி பலருக்கும் தெரியாது!
இந்தியாவில், ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் என்பது மலிவு விலையில் வலுவான பைக் ஆப்ஷனாக இருக்கிறது. இந்த பைக் ரூ.59,998 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது, இது குறைந்த விலை பைக்கை தேடுபவர்களுக்கு அற்புதமான மதிப்பை வழங்குகிறது. மேலும் அது அற்புதமான மைலேஜையும் கொடுக்கிறது. செயல்திறன் மற்றும் சிக்கனம் இரண்டையும் தேடுபவர்களுக்கு இது சரியான மாடலாக இருக்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ எச்எஃப் டெலக்ஸ் பல்வேறு மாடல்களில் வருகிறது, இது வெவ்வேறு விருப்பங்கள் மற்றும் பட்ஜெட்களுக்கு ஏற்றது. HF DELUXE BLACK AND ACCENT மாடலின் விலை ₹ 59,998 என்ற விலையிலும். அதேசமயம், HF DELUXE DRUM BRAKE KICK START மாடலின் விலை ₹ 62,370 எனவும் விற்பனையாகிறது . செல்ஃப் ஸ்டார்ட் ஆப்ஷனை விரும்புவோருக்கு, HF DELUXE DRUM BRAKE SELF START ₹ 68,018 விலையில் கிடைக்கிறது. டாப் மாடலான HF DELUXE I3S DRUM BRAKE SELF STARTன் விலை ₹ 69,518 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது.

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் என்பது வலுவான ஏர் கூல்டு , 4-ஸ்ட்ரோக்,சிங்கிள் சிலிண்டர் OHC இன்ஜினால் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினின் இடப்பெயர்ப்பு 97.2 cc ஆகும். மேலும் இது 8000 rpm இல் 5.9 kW அதிகபட்ச பவரை வெளியிடுகிறது. கூடுதலாக, இது 6000 rpm இல் 8.05 Nm டார்க் திறனை உற்பத்தி செய்கிறது. இது தினசரி பயணத் தேவைகளுக்கு நம்பகமான செயல்திறனை உறுதி செய்கிறது.
குடும்பத்துடன் பயணிக்க இந்த பைக் ஏற்றதாக இருக்கும். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள், அல்லது கிராமத்தில் குறைந்த வருமானத்தை ஈட்டி வரும் குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு இது மிகப்பெரிய வரப்பரசாதமாக அமைந்துள்ளது. இதன் குறைந்த விலையும் இந்த பைக் மீது மக்கள் ஈர்ப்பு ஏற்படுவதற்க முக்கியமான காரணம்

இந்த பைக் சுமார் 70 kmpl அற்புதமான மைலேஜைக் கொடுக்கிறது. இது நீண்ட பயணங்களுக்கு சிக்கனமான தேர்வாக அமைகிறது. HF100 எனப்படும் பேஸ் மாடல், டூயூப் டயர்கள் மற்றும் டிரம் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் இந்திய சாலைகளில் அதன் நடைமுறை மற்றும் திறனை அதிகரிக்கின்றன.
இந்தியாவில் குறைந்த விலையில் வாகனங்களை வாங்க பலர் யோசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த பைக் நல்ல ஆப்ஷனாக இருக்கும். அதே நேரம் அதிகமான மைலேஜ் என்பது இந்தியாவில் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அதை ஒப்பிடும் போது இந்தியாவில் இந்த பைக்குகள் சிறப்பான மைலேஜை வழங்குகின்றன.

இந்தியாவில் திருமணங்களின் போது சீர்வரிசையாக பைக் வாங்கிக்கொடுப்பது சில இடங்களில் பழக்கங்களாக இருக்கிறது. இந்த பைக்கை பலர் திருமண சீராக கூட கொடுத்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பிரபலமடையும் இதுவும் ஒரு காரணம். இ்நத பைக்கிற்கான பராமரிப்பு செலவும் குறைவு, அது நேரம் மைலேஜ் வெகுவாக குறைவதால் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக, ஹீரோ எச்எஃப் டெலக்ஸ் மலிவு விலை மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் கவர்ச்சிகரமான கலவையை வழங்குகிறது. அதன் பல்வேறு மாடல்கள் மற்றும் திறமையான எஞ்சின் செயல்திறனுடன், இது தரத்தில் சமரசம் செய்யாமல் நம்பகத்தன்மையைத் தேடுபவர்களுக்கு நன்றாகப் பொருந்தும்.


Click it and Unblock the Notifications









