70 கிமீ மைலேஜ் தரும் பைக் விலை தரமட்டத்துக்கு குறைஞ்சிருச்சு! இவ்ளோ கம்மி ஆகும்னு நெனச்சு கூட பாக்கல!

இந்திய சந்தையில் கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு (Commuter Bikes) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. விலை குறைவு மற்றும் மைலேஜ் அதிகம் போன்ற காரணங்களால், கம்யூட்டர் ரக பைக்குகளை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். அப்படி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கம்யூட்டர் ரக பைக்குகளில் ஒன்றுதான் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe).

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில், 97.2 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 5.9 Kw பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 8.05 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Hero HF Deluxe

இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) தெரிவிக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாக இருந்தாலும், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விலை குறைவுதான்.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் தற்போதைய நிலையில் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. இதில், ஆல் பிளாக் ஓபிடி2பி வேரியண்ட்டின் விலை வெறும் 60,738 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் கிக் காஸ்ட் ஓபிடி2பி வேரியண்ட்டின் விலை 64,860 ரூபாயாக இருக்கிறது.

Hero HF Deluxe Side View

மறுபக்கம் செல்ஃப் காஸ்ட் ஓபிடி2பி வேரியண்ட்டின் விலை 70,508 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஐ3எஸ் காஸ்ட் ஓபிடி2பி வேரியண்ட்டின் விலை 72,008 ரூபாயாக இருக்கிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டான ப்ரோ வேரியண்ட்டின் விலை 74,290 ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விலை குறையவுள்ளது. காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விலை அதிகபட்சமாக 5,805 ரூபாய் வரை குறையவுள்ளது. ஜிஎஸ்டி (GST) குறைக்கப்பட்டுள்ளதால், வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு, அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.

ஆனால் 5,805 ரூபாய் என்பது, அதிகபட்சமாக குறையும் விலை ஆகும். வேரியண்ட்களை பொறுத்து, விலை எவ்வளவு குறையவுள்ளது? என்பது மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இன்னும் கூடுதல் விபரங்களுக்கு, உங்கள் அருகில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கம்யூட்டர் செக்மெண்ட் பைக்குகளை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முக்கியமான காரணமே அதன் குறைவான விலைதான். அப்படி இருக்கும்போது, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விலை அதிகபட்சமாக 5,805 ரூபாய் வரை குறையவிருப்பது, வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.

அத்துடன் இது நல்ல மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாகவும் இருக்கிறது. எனவே இந்திய சந்தையில் வரும் மாதங்களில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் இந்தியாவில் தீபாவளி (Diwali) பண்டிகை காலமும் வேறு நெருங்கி கொண்டுள்ளது.

இந்த சமயத்தில் டீலர்ஷிப்களில் மிக கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மற்றும் தீபாவளி சலுகைகள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து, எதிர்வரும் பண்டிகை காலத்தில் புதிய வாகனங்களை வாங்குபவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்க போகின்றன என்பதில் துளியும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 10, 2025, 17:12 [IST]
English summary
Hero hf deluxe cheaper by up to rs 5805 gst price cut impact
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+