வெறும் 60 ஆயிரத்துக்கு 70 கிமீ மைலேஜை வாரி வழங்கும் பைக்கா! ஹீரோ நிறுவனத்துக்கு கோயிலே கட்டி கும்பிடலாம்!

இந்திய சந்தையில் அதிக டூவீலர்களை (Two Wheelers) விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) முன்னணி இடத்தில் உள்ளது. இதற்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கும் ஒரு காரணம் ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹீரோ பைக்குகளில் ஒன்றாக ஹெச்எஃப் டீலக்ஸ் திகழ்கிறது.

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கிற்கு சரியாக அமையவில்லை. ஆம், விற்பனையில் மிகப்பெரிய சரிவை இந்த பைக் கண்டுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.

Hero HF Deluxe

நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 41,645 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 97,048 ஆக இருந்தது. அதாவது 55,403 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 57.09 சதவீத வீழ்ச்சி ஆகும்.

ஆனால் இந்த சரிவு தற்காலிகமான ஒன்றாக மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. வரும் மாதங்களில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் உடனடியாக வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் விலை குறைவான மற்றும் நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடிய பைக் என்பதுதான் இதற்கு காரணம்.

Hero HF Deluxe Side Design

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 62,500 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 68,500 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில், 97.2 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 5.9 kW பவர் மற்றும் 8.05 Nm டார்க் ஆக உள்ளது. இந்த பைக்கில் கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ட்யூப்லெஸ் டயர்கள், யூஎஸ்பி சார்ஜர், i3S தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் (Features), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 9.6 லிட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) இந்த பைக் கிடைக்கிறது.

இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள xSENS FI தொழில்நுட்பம், அதிக மைலேஜ், உடனடி பிக் அப் மற்றும் பவரை உறுதி செய்கிறது. அதே போல் நீங்கள் சைடு ஸ்டாண்டை எடுக்காவிட்டால், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் நகராது. சைடு ஸ்டாண்டை எடுக்காமல் சென்று பலர் சாலை விபத்துக்களில் (Road Accidents) சிக்கி கொள்கின்றனர்.

ஞாபக மறதியில் இது போன்ற விபத்துக்கள் நடைபெற்று விடுகின்றன. ஆனால் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில் அப்படி நடக்காது. இந்த வசதி, பயணிகளின் பாதுகாப்பை (Safety) உறுதி செய்கிறது. இது போன்ற சிறப்பம்சங்களுடன், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஒரு லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் வழங்குவதாக, அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் நல்ல மைலேஜ் வழங்க கூடிய ஒரு புதிய பைக்கை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹெச்எஃப் டீலக்ஸ் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 26, 2025, 15:53 [IST]
English summary
Hero hf deluxe sales report april 2025 57 per cent down
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+