வெறும் 55 ஆயிரத்துக்கு 70 கிமீ மைலேஜ் தரும் ஹீரோ பைக்கா! ஹோண்டா ஷைன், பஜாஜ் பிளாட்டினா கதை முடிஞ்சுது!

இந்திய டூவீலர் சந்தையின் 'கிங்'-ஆக திகழ்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக் ஆகும். இந்த பைக் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் விதிவிலக்கு அல்ல. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை, 6.09 சதவீதம் உயர்ந்துள்ளது.

Hero HF Deluxe

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 84,607 ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 89,762 ஆக உயர்ந்துள்ளது. இது 6.09 சதவீத வளர்ச்சி ஆகும்.

கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 5,155 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாகவே 6.09 சதவீத வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. அத்துடன் இந்த வளர்ச்சியின் மூலமாக, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதிகமாக விற்பனையான டாப் 10 பைக்குகளின் (Top 10 Bikes August 2025) பட்டியலில், ஹெச்எஃப் டீலக்ஸ் 4வது இடத்தை பிடித்துள்ளது.

Hero HF Deluxe Side View

இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பல்சர் ஆகியவை உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 55,992 ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 68,485 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஜிஎஸ்டி (GST) வரிகள் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விலை தற்போது குறைந்துள்ளது.

முன்பு இந்த பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 60,738 ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 74,290 ரூபாயாக இருந்தது. எனவே முன்பை காட்டிலும் தற்போது மிகவும் குறைவான விலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கை நம்மால் வாங்கி விட முடியும்.

செயல்திறனை பொறுத்தவரையில், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில், 97.2 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) மற்றும் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) போன்ற பைக்குகள் உடன், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் போட்டியிட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 30, 2025, 23:51 [IST]
English summary
Hero hf deluxe sales report august 2025 6 09 per cent growth
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+