விலை 60 ஆயிரம் கூட இல்ல! 70 கிமீ மைலேஜ் வழங்கும் பைக்கை வாங்க கூட்டம் கூட்டமா ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு (Commuter Bikes) வரவேற்பு அதிகம். கம்யூட்டர் ரக பைக்குகள் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவை. அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியவை. விலை குறைவானவை. அத்துடன் அவற்றை பராமரிப்பதும் கூட எளிமையான ஒரு விஷயம்தான்.

இப்படி ஏராளமான நன்மைகள் (Benefits) கிடைக்கின்ற காரணத்தால்தான், கம்யூட்டர் ரக பைக்குகளை இந்திய வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்குகின்றனர். அப்படி இந்திய வாடிக்கையாளர்களால் அதிக அளவில் விரும்பி வாங்கப்படும் கம்யூட்டர் ரக பைக்குகளில் ஒன்றுதான் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe).

Hero HF Deluxe

இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 71,477 ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெறும் 46,627 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 24,850 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Hero HF Deluxe Side View

இதன் மூலம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் விற்பனையில் 53.30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers July 2025), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் 6வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), ஹோண்டா ஷைன் (Honda Shine), டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மற்றும் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) ஆகிய டூவீலர்கள் உள்ளன.

இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ள ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை வெறும் 59,998 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 73,550 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கிறது. இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு (Fuel Tank Capacity) 9.6 லிட்டர்கள் ஆகும். விலை குறைவான பைக்காக இருந்தாலும் கூட, ட்யூப்லெஸ் டயர்கள், குறிப்பிட்ட வேரியண்ட்களில் ஐ3எஸ் தொழில்நுட்பம் மற்றும் ஆக்ஸஸரீஸ் வடிவில் யூஎஸ்பி சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் கொண்டுள்ளது.

அத்துடன் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 97.2 சிசி இன்ஜின் ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய, அதே நேரத்தில் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 26, 2025, 14:15 [IST]
English summary
Hero hf deluxe sales report july 2025 53 30 per cent growth
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+