75 கிமீ மைலேஜை வாரி வழங்கும் பைக்கோட விலை இவ்ளோதானா! குடும்பத்துல இருக்க ஒவ்வொருத்தருக்கும் ஒன்னு வாங்கலாம்!
இந்தியாவின் 100-110 சிசி கம்யூட்டர் பைக் செக்மெண்ட்டின் கிங் என்றால், அது ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotorCorp) என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். இந்த செக்மெண்ட்டில் 100 பைக்குகள் விற்பனையாகிறது என்றால், அதில் 78 பைக்குகள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடையது ஆகும்.
இந்தியாவின் 100-110 சிசி கம்யூட்டர் பைக் செக்மெண்ட்டின் கிங்-ஆக ஹீரோ மோட்டோகார்ப் திகழ்கிறது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக திகழ்வது ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) ஆகும். தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் இருக்கிறது.

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 1,00,878 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 89,941 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 10,937 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 12.16 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes June 2025), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) ஆகும்.
இரண்டாவது இடத்தில் ஹோண்டா ஷைன் (Honda Shine) உள்ளது. இந்த வரிசையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், 97.2 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பைக் ஆகும். ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் முன்பு மொத்தமாக 4 வேரியண்ட்களில் மட்டுமே கிடைத்து வந்தது.
இதில், ஹெச்எஃப் டீலக்ஸ் ஆல் பிளாக் ஓபிடி2பி வேரியண்ட்டின் விலை 59,998 ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் ஹெச்எஃப் டீலக்ஸ் கிக் காஸ்ட் ஓபிடி2பி வேரியண்ட்டின் விலை 64,120 ரூபாயாக உள்ளது. மறுபக்கம் ஹெச்எஃப் டீலக்ஸ் செல்ஃப் காஸ்ட் ஓபிடி2பி வேரியண்ட்டின் விலை 69,768 ரூபாயாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஹெச்எஃப் டீலக்ஸ் ஐ3எஸ் காஸ்ட் ஓபிடி2பி வேரியண்ட்டின் விலை 71,268 ரூபாயாக உள்ளது. ஆனால் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில் புதிதாக ஒரு வேரியண்ட் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ப்ரோ (Hero HF Deluxe Pro) என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை 73,550 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதுதான் இனிமேல் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் டாப் வேரியண்ட்டாக இருக்கும். ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ப்ரோ வேரியண்ட்டில் கூடுதல் பாடி கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கை இன்னும் அழகாக காட்டுகிறது.
ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ப்ரோ வேரியண்ட்டில், புதிய டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஐ3எஸ் (i3S - idle Stop Start System) வசதியையும், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ப்ரோ வேரியண்ட் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் ஒரு லிட்டருக்கு 60-75 கிலோ மீட்டர் வரை மைலேஜ் (Mileage) தருவதாக, அதை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர். பைக்கை ஓட்டும் விதம் உள்ளிட்ட காரணிகளை பொறுத்து மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இருப்பினும் ஒட்டுமொத்தத்தில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் சிறப்பான மைலேஜ் வழங்கும் பைக்குகளில் ஒன்றாகவே உள்ளது. எனவே இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








