70 கிமீ மைலேஜ் தரும் பைக்கை வெறும் 60 ஆயிரத்துக்கு விக்கறாங்களா! மொத்த கூட்டமும் ஹீரோ ஷோரூம்லதான் இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான பைக்குகளுக்கு (Most Affordable Bikes), வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதும் அதிக 'டிமாண்ட்' இருந்து வருகிறது. அப்படி வாடிக்கையாளர்கள் மத்தியில், அதிக டிமாண்ட் உள்ள மிகவும் விலை குறைவான பைக்குகளில் ஒன்றுதான் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe).
வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதால், ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு 2025ம் மே மாதம், 1,07,768 ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் வெறும் 87,143 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது தற்போது 20,625 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 23.67 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers May 2025), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், 5வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 4 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா, ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பல்சர் ஆகியவை உள்ளன.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில், 97.2 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஹெச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 5.9 kW பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 8.05 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 9.60 லிட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 165 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 805 மிமீ ஆகவும் உள்ளது. இந்த பைக்கின் கிக் ஸ்டார்ட் மாடலின் எடை 110 கிலோ ஆகவும், செல்ஃப் ஸ்டார்ட் வேரியண்ட்டின் எடை 112 கிலோ ஆகவும் இருக்கிறது.
ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 59,998 ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 70,618 ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport), ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.
ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஒரு லிட்டருக்கு 70 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குவதாக, அந்த பைக்கை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர். எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்கும் ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மிகச்சிறந்த ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








