ஜனநாயகன் படத்தை விட இந்த பைக் பத்திதான் இப்ப எல்லாரும் பேசறாங்க! 70 கிமீ மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா!

உலகின் மிகப்பெரிய டூவீலர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான ஸ்கூட்டர்களும், பைக்குகளும் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக மிகவும் குறைவான விலையில் கிடைக்க கூடிய ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு, இந்தியாவில் மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) மற்றும் ஹோண்டா (Honda) போன்ற நிறுவனங்கள் எல்லாம், ஏராளமான ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero Hf Deluxe), மிகவும் பிரபலமான ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளில் ஒன்றாக உள்ளது.

Hero HF Deluxe Side View

குறைவான விலை மற்றும் சிறப்பான மைலேஜ் போன்ற காரணங்களால், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 91,082 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 61,245 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Hero HF Deluxe

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 29,837 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் விற்பனையில் 48.72 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் மிக பிரம்மாண்டமான வரவேற்பால் மட்டுமே இந்த மிகப்பெரிய வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் பட்டியலில் (Top 10 Motorcycles Sales November 2025) ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் 4வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பல்சர் ஆகிய பைக்குகள் உள்ளன.

தற்போதைய நிலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 55,992 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் வெறும் 68,485 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அத்துடன் இது ஒரு சில செல்போன்களை விட மிகவும் விலை குறைவானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் விலை குறைவான பைக்காக இருந்தாலும் கூட, எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. அத்துடன் மைலேஜை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் உதவி செய்யும் ஐ3எஸ் தொழில்நுட்பமும் இந்த பைக்கில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர்கள் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 24, 2025, 23:20 [IST]
English summary
Hero hf deluxe sales report november 2025 48 72 per cent growth
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+