வெறும் 55 ஆயிரத்துக்கு 70 கிமீ மைலேஜ் குடுக்கும் பைக்கா! ஹோண்டா ஷைன், பஜாஜ் பிளாட்டினா கதை முடிஞ்சுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்டின்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 1,13,998 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,24,343 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 10,345 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Hero HF Deluxe

இது 8.32 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் கூடிய விரைவில் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாகும்.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில் 97.2 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஹெச்சி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5.9 Kw பவரையும், 8.05 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Hero HF Deluxe Side View

ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அத்துடன் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது ஓரளவிற்கு விலை குறைவான ஒரு பைக்தான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 55,992 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 68,485 ரூபாயாக இருக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில், எல்இடி ஹெட்லேம்ப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் உடனடி பிக்-அப் மற்றும் பவரை உறுதி செய்யும் சென்சார் அடிப்படையிலான எக்ஸ்சென்ஸ் எஃப்ஐ தொழில்நுட்பம் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சைடு ஸ்டாண்டை எடுக்காமல் இருந்தால், இந்த பைக் நகராது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு வசதி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2025, 23:08 [IST]
English summary
Hero hf deluxe sales report october 2025 8 32 per cent down
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+