70 கிமீ மைலேஜ் பைக்கை இவ்ளோ கம்மி ரேட்ல விக்கறதுக்கு பெரிய மனசு வேணும்! ஹீரோவுக்கு கோயிலே கட்டி கும்பிடலாம்!
இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஏராளமான ஆரம்ப நிலை கம்யூட்டர் செக்மெண்ட் ரக பைக்குகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மிகவும் முக்கியமானது.
இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 1,18,043 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கையானது, வெறும் 1,13,827 ஆக மட்டும்தான் இருந்தது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 4,216 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் விற்பனையில் 3.70 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Motorcycles September 2025), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக், 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில், முதல் 3 இடங்களில் முறையே, ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பல்சர் ஆகிய பைக்குகள் உள்ளன.

இந்த வரிசையில் 4வது இடம் பிடித்துள்ள ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் செயல்திறனை பொறுத்தவரையில், 97.2 சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 5.9 Kw பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 8.05 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இது சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு இன்ஜின் ஆகும். இதன் உடன், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் பகுதி மற்றும் பின் பகுதி என இரண்டு பகுதிகளிலும் ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்ககப்பட்டுள்ளன. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின் பகுதியில் 2 ஸ்டெப் அட்ஜெஸ்ட்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் இந்த பைக்கின் இருக்கை உயரம் 805 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 165 மிமீ ஆகவும், எடை 112 கிலோ ஆகவும், எரிபொருள் டேங்க் கொள்ளளவு 9.6 லிட்டர்கள் ஆகவும் உள்ளது. மறுபக்கம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 55,992 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 68,485 ரூபாயாக இருக்கிறது. இவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஏற்றதாக இருக்கும். பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) மற்றும் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) போன்ற பைக்குகளுக்கு மாற்றாக ஒரு பைக்கை தேடி கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்கள், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








