விற்பனையில் 'ஈ' அடிக்கும் பைக் மாடலில் புதிய ஆப்ஷன் வர போகுதா! இதனாலதான் ஹீரோவை எல்லாரும் ஜாம்பவானு சொல்றாங்க!

இந்திய இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தேறாத பைக் மாடலாக கரிஷ்மா (Karizma) காட்சியளிக்கின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 2024 டிசம்பர் தொடங்கி 2025 பிப்ரவரி வரை என மூன்று மாதங்களில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை. ஆமாங்க, பூஜ்ஜியம் என்கிற நிலையிலேயே அதன் விற்பனை உள்ளது. இதற்கு முந்தைய மாதங்களிலும் இந்த பைக்கின் விற்பனை சொல்லும்படி இல்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

2024 அக்டோபர் 7 யூனிட்டுகளும், 2024 நவம்பரில் 4 யூனிட்டுகள் மட்டுமே கரிஷ்மா விற்பனையாகியது. இத்தகைய மோசமான விற்பனை வரவேற்பையே இந்தியர்கள் மத்தியில் கரிஷ்மா பெற்றுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பின்தங்கிய விற்பனைக் காரணமாக இந்த பைக்கை ஹீரோ எப்போது வேண்டுமானாலும் விற்பனையில் இருந்து வெளியேற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

Hero karizma xmr 250 launch expected soon

ஆனால், ஹீரோ நிறுவனம் கரிஷ்மா பைக்கில் வேறு ஒரு புதிய தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் (Karizma XMR), 210 சிசி (210 CC) எஞ்சின் உடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த நிலையிலேயே இந்த பைக் மாடலில் புதிதாக 250 சிசி திறன் கொண்ட தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரிஷ்மா பைக்கை இந்தியாவில் வாழ வைக்கும் பொருட்டு இந்த வேலையை அது செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

250 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது அதிகபட்சமாக 30 பிஎச்பி மற்றும் 25 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல டிஎஃப்டி திரை, டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கூடுதல் கட்டுமஸ்தான பாடி பேனல் மற்றும் கவர்ச்சியான எல்இடி லைட் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த பைக்கில் எதிர்பார்க்கலாம்.

இதுமட்டுமல்ல யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் போன்ற அம்சங்களையும் புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 250 பைக்கில் எதிர்பார்க்கலாம். எனவே இப்போது விற்பனையில் இருக்கும் ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 மாடலைக் காட்டிலும் அசத்தலான தேர்வாக கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 250 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற துள்ளியமான விபரம் தெரியவில்லை. இருப்பினும் ஒரு சில வாரங்களில் இது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் வருகையால் கரிஷ்மா விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டும் என நம்பப்படுகின்றது. மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறவில்லை என்றாலும் குறைந்தபட்ச அளவிலாவது விற்பனை வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தேறாது என நினைத்துக் கொண்டிருக்கும் பைக்கை தேத்த நினைத்து ஹீரோ நிறுவனம் சூப்பரான முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த மாதிரியாக தனித்துவமான பணிகளை அது மேற்கொள்வதனாலேயே பலர் ஹீரோ மோட்டோகார்ப்பை இந்திய இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்று அழைக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 3, 2025, 23:13 [IST]
English summary
Hero karizma xmr 250 launch soon here is more details
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+