ஹீரோ 2-வீலர் ஷோரூம்களில் காத்து வாங்குது... ஒரே மாதத்தில் எல்லாம் தலைக்கீழா மாறிடுச்சு!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். ஸ்கூட்டர்கள் (Scooters) விற்பனை பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், ஹீரோ மோட்டோகார்ப் பைக்குகள் விற்பனையில் மிகுந்த ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. ஆனால், நடந்து முடிந்த 2025 ஏப்ரல் மாத விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஹீரோ நிறுவனத்தின் விற்பனை பாதிக்கு பாதி குறைந்து உள்ளது.

hero motocorp 2-wheelers sales report

கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 5 லட்சத்து 33 ஆயிரத்து 585 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹீரோ மோடோகார்ப் நிறுவனம், இந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 3 லட்சத்து 5 ஆயிரத்து 406 இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதன்படி பார்க்கும்போது, ஹீரோ நிறுவனத்தின் விற்பனை ஆனது சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்து 179 யூனிட்கள் குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய மாதங்களில் இந்த நிறுவனத்தின் விற்பனை வழக்கம்போல் சிறப்பானதாகவே இருந்தது. குறிப்பாக, கடந்த 2025 மார்ச் மாதத்தில் சுமார் 5 லட்சத்து 49 ஆயிரத்து 604 இருசக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

hero motocorp 2-wheelers sales report

இந்த வகையில் பார்க்கும்போது, ஹீரோவின் விற்பனை மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரலில் 2,44,198 வாகனங்கள் குறைந்துள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த 3,05,406 இருசக்கர வாகனங்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 2 லட்சத்து 88 ஆயிரத்து 524 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 16 ஆயிரத்து 882 ஆகும்.

ஹீரோவின் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் வழக்கத்தை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளது. உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சேர்த்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 89 பைக்குகளையும், 19 ஆயிரத்து 317 ஸ்கூட்டர்களையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஹீரோ பைக்குகள் விற்பனை ஆனது 2024 ஏப்ரலை காட்டிலும் 2 லட்சத்து 10 ஆயிரத்து 453 யூனிட்கள் குறைந்துள்ளது. ஏனெனில், 2024 ஏப்ரலில் மொத்தம் 4 லட்சத்து 96 ஆயிரத்து 542 பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. அதேபோல், ஹீரோ ஸ்கூட்டர்கள் விற்பனையும் 17 ஆயிரத்து 726 யூனிட்கள் குறைந்துள்ளது.

ஏனெனில், கடந்த ஆண்டு ஏப்ரலில் 37 ஆயிரத்து 43 ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. இவ்வாறு ஹீரோ மோட்டோகார்பின் அனைத்து விற்பனைகளும் குறைந்திருப்பதற்கு காரணம், கடந்த ஏப்ரலில் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் 17 முதல் 19 வரையில் 3 நாட்களுக்கு வாகன உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிற்சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும், சப்ளை செயினை ஒழுங்குப்படுத்துவதற்காகவும் இந்த சிறிய இடைவெளியை ஹீரோ மோட்டோகார்ப் பயன்படுத்தியது. ஆனால், வெறும் 3 நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தால் ஹீரோ நிறுவனத்தின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஏனெனில், உற்பத்தி நிறுத்தம் 3 நாட்கள் மட்டுமே என்றாலும், இதன் எதிரொலியாக மற்ற பணிகள் இன்னும் கூடுதல் நாட்களுக்கு பாதித்து இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 2, 2025, 10:59 [IST]
English summary
Hero motocorp 2 wheelers sales report of 2025 april check all details here
மேலும்... #hero motocorp #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+