பேட்டரியை தனியா கழற்றி கொண்டுபோய் வீட்டுக்குள் சார்ஜ் போடலாம்! 5இல் ஒரு பங்கு விலை குறைச்சிட்டாங்க!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters), பரவலாக நிறைய பகுதிகளில் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்தியாவில் ஆரம்பத்தில் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் (Start-up Companies) மட்டுமே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஈடுப்பட்டுவந்த நிலையில், கடந்த சில வருடங்களாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) போன்ற முன்னணி 2-வீலர் நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளன. ஹீரோ நிறுவனத்தை பொறுத்தவரையில், விடா (Vida) என்கிற தனியாக ஒரு நிறுவனத்தை துவங்கி எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஹீரோ விடா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிறப்பு சலுகைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. சலுகையை பற்றி பார்ப்பதற்கு முன், விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி பார்க்கலாம். ஹீரோ விடா நிறுவனத்தில் இருந்து வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட்ட 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும்.

hero vida v2

லைட், பிளஸ் மற்றும் புரோ என 3 விதமான வேரியண்ட்களில் விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், லைட் ஆனது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வேரியண்ட் ஆகும். குறைந்த விலையில் வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கஸ்டமர்களுக்கு வழங்கும் முயற்சியாக லைட் வேரியண்ட்டை விடா நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதற்கேற்ப லைட் வேரியண்ட்டில் அளவில் சிறியதான 2.2kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இதற்கேற்ப முழு சார்ஜில் ஸ்கூட்டர் இயங்கக்கூடிய தொலைவும் சற்று குறைவாக 94கிமீ ஆக உள்ளது. அதுவே, விடா வி2 பிளஸ் வேரியண்ட்டில் 3.44kWh பேட்டரியும், புரோ வேரியண்ட்டில் 3.94kWh பேட்டரியும் பொருத்தப்படுகிறது.

hero vida v2

இத்தகைய விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரையில் இருந்தன. இந்த நிலையில்தான், விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தற்போது ரூ.30 ஆயிரம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.74 ஆயிரத்து இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 300 வரையிலான விலையில் வாங்கலாம்.

விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் லைட் வேரியண்ட் ரூ.74,000 என்கிற விலையிலும், பிளஸ் மற்றும் புரோ வேரியண்ட்கள் முறையே ரூ.82,800 மற்றும் ரூ.1,20,300 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளிலும் கிடைக்கும். இதில் மிட்-வேரியண்ட்டான பிளஸ் அதிகப்படியான சலுகையினை பெற்றுள்ளது. ஸ்கூட்டரின் குறைக்கப்பட்ட விலை குறித்த விபரங்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.

சலுகையை பற்றிய விரிவான விபரங்களுக்கு அருகில் உள்ள விடா டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும். இந்த சலுகையின்படி, ரூ.74 ஆயிரம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் விடா வி2 லைட் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக மணிக்கு 69கிமீ வேகத்தில் போகலாம். ரைடு மற்றும் ஈக்கோ என 2 விதமான ரைடிங் மோட்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கிடைக்கின்றன.

குறைந்த விலையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பினும் 7-இன்ச்சில் டிஎஃப்டி டச் ஸ்க்ரீனை வழங்கி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அழகு பார்க்கிறது. வி2 பிளஸ் வேரியண்ட்டில் வழங்கப்படும் 3.44kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 143கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். வி2 புரோ வேரியண்ட்டில் 3.94kWh பேட்டரியின் மூலம் 165கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும் பேட்டரியை தனியாக கழற்றி வெளியே எடுத்து சார்ஜ் செய்ய முடியும். பேட்டரியை 0இல் இருந்து 80% சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 6 மணிநேரங்கள் தேவைப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்படும் பி.எம்.எஸ் மோட்டாரில் இருந்து அதிகப்பட்சமாக 6 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எந்தவொரு குறையும் சொல்ல முடியாது. எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க தயங்குபவர்கள், விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவான லைட் வேரியண்ட்டை வாங்கி பயன்படுத்த முயற்சிக்கலாம். இந்த இ-ஸ்கூட்டரில் பேட்டரியை தனியாக கழற்றி சார்ஜ் செய்யலாம் என்பது உண்மையில் கவர்ச்சிக்கரமான அம்சம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 16:28 [IST]
English summary
Hero motocorp announced offers for vida v2 electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+