50 நாடுகளில் கிளைகள் வைத்திருந்தாலும், இந்தியா தான் தலைமையகம்! டெல்லியின் பிரபலமான 2-வீலர் கம்பெனி!

உலகிலேயே இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), ஸ்பெயின் நாட்டு சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. ONEX குழுமத்தின் ஒரு பகுதியான நோரியா மோட்டோஸ் (Noria Motos) என்கிற நிறுவனத்துடன் இணைந்து, ஐரோப்பிய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான யூரோ 5+ (Euro 5+) இருசக்கர வாகனங்களுடன் ஸ்பெயின் நாட்டில் நுழைந்துள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக 125 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வரும் ஹீரோ மோட்டோகார்ப், இதன் மூலம் ஐரோப்பாவில் தனது இருப்பை வலுப்படுத்தி, 50வது சர்வதேச சந்தையில் கால் பதித்துள்ளது. ONEX குழுமத்தின் நோரியா மோட்டோஸ் நிறுவனம், ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் 30க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை மையங்கள் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்படி செய்யும்.

hero motocorp in spain

மேலும், ஸ்பெயினில் 2026-க்குள் 50க்கும் மேற்பட்ட இடங்களுக்கும், 2028-க்குள் அனைத்து முக்கிய இடங்களுக்கும் தனது நெட்வொர்க்கை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் தற்போதைக்கு 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமைந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை மையங்கள், சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் வழங்க தயாராக உள்ளன.

"நீங்கள் எல்லையற்றவர்" என்பதே ஸ்பெயின் நாட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய தத்துவமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஸ்பெயினில் அவர்கள் அறிமுகமாகும்போது, "நீங்கள் எல்லையற்றவர்" என்ற வலிமையான நம்பிக்கையை கொண்டு வருகிறது. இந்த தத்துவம் இன்றைய கால பைக் சாகச வீரர்களின் உணர்வைக் கொண்டாடும் விதமாகவும் அமைந்துள்ளது.

hero motocorp in spain

இருசக்கர வாகனங்களின் உற்பத்தி & விற்பனையில் மட்டுமின்றி, வணிகத்திற்கு வெளியேயும் பல்வேறு சவால்களை வென்று, வெறும் ஏழு ஆண்டுகளில் டக்கார் (Dakar) போட்டியில் முதல் 3 இடங்களுக்குள் இடம்பிடித்த இளைய அணியாக, சுதந்திரமாகவும், நெகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் மற்றும் உறுதிப்பாட்டுடனும் ஸ்பெயின் நாட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கால் பதித்துள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 4வி (Xpulse 200 4V), எக்ஸ்பல்ஸ் 200 4வி புரோ (Xpulse 200 4V Pro) மற்றும் ஹங்க் 440 (Hunk 440) ஆகிய மூன்று முக்கிய பைக்குகள் உடன் ஸ்பெயினில் ஹீரோ மோட்டோகார்ப் நுழைந்துள்ளது. அட்வென்ச்சர் (Adventure) ரக எக்ஸ்பல்ஸ் பைக்குகள் வறண்ட கரடு முரடான மலைகளும், காடுகளும் நிறைந்த ஸ்பெயின் நாட்டில் பயன்படுத்துவதற்கு ஏற்ற பைக்குகள் ஆகும்.

hero motocorp in spain

ஒவ்வொரு பயணத்தையும் ஒரு புதிய கண்டுபிடிப்பாக மாற்ற ஸ்பெயின் சாகச வீரர்களை ஊக்குவிப்பதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுப்புறம், தைரியமான மற்றும் நம்பிக்கையான ஹங்க் 440, பைக் சாகச வீரர்கள் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தவும், தங்கள் விருப்பப்படி வாழவும் ஊக்குவிக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் E5+ மற்றும் EU விதிமுறைகளுக்கு இணக்கமானவை. உலகளாவிய புதிய தலைமுறை சாகச வீரர்களுக்காக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக பெரிய 2-வீலர் சந்தையாக விளங்கும் இந்தியாவில் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக இருப்பதே ஹீரோ மோட்டோகார்ப் ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைவதற்கு போதுமான தகுதியாகும். நம் இந்தியாவை போல் இல்லாமல், இந்த ஐரோப்பிய நாட்டில் சற்று பிரீமியம் தரத்திலான பைக்குகளுக்கே வரவேற்பு கிடைக்கும் என்பதை புரிந்துக் கொண்டு, இந்தியாவில் விற்பனை செய்யும் தனது விலையுயர்ந்த பைக்குகளை ஸ்பெயின் நாட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலாவதாக களமிறக்கி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 15, 2025, 21:16 [IST]
English summary
Hero motocorp announced official entry into spain in partnership with noria motos
மேலும்... #hero motocorp
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X