ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம்! ஒவ்வொரு நாடாக வளர்ந்துவரும் இந்திய பைக் கம்பெனி!

உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), யூரோ 5+ மாசு விதிமுறைகளுக்கு இணக்கமான ஹன்க் 440 பைக் உடன், யுனைடெட் கிங்டம் (UK) சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது. மோட்டோஜிபி (MotoGB) நிறுவனத்துடன் கைகோர்த்து, ஐரோப்பா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்தி, 51வது சர்வதேச சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் அடியெடுத்து வைத்துள்ளது.

யுகே அறிமுகத்தின் ஒரு பகுதியாக, ஹீரோ மோட்டோகார்ப் தனது மேம்பட்ட யூரோ 5+ ரக பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்கும் பைக்குகளிலேயே விலையுயர்ந்த ஹன்க் 440 பைக் முக்கியமானது. யுகே பிராந்தியத்தில் உயர் செயல்திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

hero motocorp in united kingdom

இருசக்கர வாகன உற்பத்தியில் உலக அளவில் 24 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், உலகம் முழுவதும் 12.5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஹீரோ மோட்டோகார்ப், யுகே சந்தையில் நுழைந்ததன் மூலம் உலக மோட்டார்சைக்கிள் துறையில் தனது வலுவான நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக துணைத் தலைவர் திரு.சஞ்சய் பான் பேசுகையில், "யுகே-வில் எங்களது நுழைவு, சர்வதேச விரிவாக்கப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நுழைந்த பிறகு, மோட்டோஜிபி உடனான எங்கள் கூட்டணி ஐரோப்பாவில் எங்கள் நிலையை மேலும் பலப்படுத்துகிறது" என்றார்.

hero motocorp in united kingdom

மேலும் அவர் கூறுகையில், "ஹன்க் 440 அறிமுகம், யுகே ஓட்டுநர்களின் தேவைகளை நாங்கள் புரிந்துகொண்டதைக் காட்டுகிறது. இது மோட்டார்சைக்கிளின் சாராம்சத்தை தக்கவைத்துக்கொண்டு, ஸ்டைல், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மலிவான விலையில் வழங்குகிறது. முதல்முறையாக பைக் ஓட்டுபவர்களும், பைக் ஆர்வலர்களும் பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை பெறுவதை எளிதாக்குவதே எங்கள் நோக்கம்" என்றார்.

"51 சர்வதேச சந்தைகளில் இப்போது எங்கள் இருப்புடன், எங்கள் அடுத்த தலைமுறை மொபிலிட்டி தீர்வுகளின் மூலம், உலகெங்கிலும் உள்ள ஓட்டுநர்களுக்கு வரம்பற்ற சுதந்திரத்தையும், சாகசத்தையும் வழங்கும் நோக்கில், மொபிலிட்டியின் எதிர்காலத்தை மறுவரையறை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்று திரு.சஞ்சய் பான் தெரிவித்தார்.

hero motocorp in united kingdom

யுனிடெட் கிங்டமின் லங்காஷயர் பகுதியை அடிப்படையாகக் கொண்ட விநியோகஸ்தரான மோட்டோஜிபி, ஆரம்பத்தில் 25க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ விற்பனை மற்றும் சேவை மையங்கள் மூலம் யுகே வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் தயாரிப்புகளை கிடைக்கும்படி செய்யும். இந்த கூட்டணி 2026-க்குள் 35க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தங்களது சேல்ஸ் & சர்வீஸ் மையங்களை அந்த நாட்டில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது யுகே முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ தயாரிப்புகளின் அதிக அணுகலை உறுதி செய்யும். விற்பனை இருப்புடன், முக்கிய நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை மையங்களின் விரிவான நெட்வொர்க், தடையற்ற விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் வணிக ஆதரவையும் வழங்கும். இதன் மூலம், நம்பகமான சேவை மற்றும் வணிக உதவியுடன் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை ஹீரோ மேம்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 51 நாடுகளில் தனது சந்தையை விரிவுப்படுத்தி இந்திய 2-வீலர் நிறுவனமாக உலகளவில் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தி வருவது, இந்தியராகிய நமக்கு தான் பெருமை ஆகும். யுகே போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் நுழைந்துள்ளதால், இந்த நாடுகளுக்காகவே வரும் காலங்களில் விலையுயர்ந்த பிரீமியம் தரத்திலான 2-வீலர்களை ஹீரோ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 23, 2025, 23:59 [IST]
English summary
Hero motocorp announced official entry into united kingdom check all details here
மேலும்... #hero motocorp
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X