ஹீரோ-ஹோண்டா மீண்டும் கூட்டணி சேர்ந்தால் மொத்த கதையும் மாறிடும்... இந்தியாவை உலகமே பார்க்கும்!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு என்றே அதிக கஸ்டமர்கள் உள்ளனர் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்திலும் இமாலய எண்ணிக்கையில் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-6 2-வீலர் நிறுவனங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

2025ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் மொத்தம் 14 லட்சத்து 49 ஆயிரத்து 400 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024ஆம் ஆண்டின் இதே ஜனவரி மாதத்தில் 14 லட்சத்து 16 ஆயிரத்து 96 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

hero motocorp top in sales

இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனை கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் 2.35%, அதாவது 33,304 யூனிட்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் இன்னும் குறைவாக வெறும் 10 லட்சத்து 55 ஆயிரத்து 206 2-வீலர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

வழக்கம்போல், கடந்த ஜனவரியில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தை ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் ஹீரோவில் இருந்து விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 12 ஆயிரத்து 378 ஆகும். அதாவது, மொத்த 2-வீலர்கள் விற்பனையில் 3இல் ஒரு பங்கை ஹீரோ மோட்டோகார்ப் கொண்டுள்ளது.

hero motocorp top in sales

ஆனால் உண்மையில், கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் ஹீரோ 2-வீலர்களின் எண்ணிக்கை ஆனது சற்று குறைவாகும். ஏனெனில், 2024 ஜனவரியில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 934 இரு சக்கர வாகனங்களை ஹீரோ விற்பனை செய்திருந்தது. ஆனால், 2024 டிசம்பரில் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை எண்ணிக்கை 3 லட்சத்தை கூட தொடவில்லை.

இதற்கடுத்து 2வது இடத்தில், ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 977 2-வீலர்கள் விற்பனை உடன் உள்ளது. அதாவது, விற்பனையில் ஹீரோ மோட்டோகார்பை ஹோண்டா கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. 2024 ஜனவரியிலும் சரி, டிசம்பரிலும் சரி ஹோண்டா 2-வீலர்களின் விற்பனை எண்ணிக்கை 4 லட்சத்தை தொடவில்லை. 3வது இடத்தில் உள்ள டிவிஎஸ் மோட்டாரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்து 860 ஆகும்.

hero motocorp top in sales

வழக்கத்தை விட டிவிஎஸ் 2-வீலர்களின் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. 4வது இடத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 299 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. இந்த டாப்-6 லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் சுஸுகி மோட்டார்சைக்கிள் & ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் முறையே 87,834 மற்றும் 81,052 இரு சக்கர வாகனங்கள் விற்பனை உடன் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்கள் எண்ணிக்கை ஆகும். இன்னும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை தனியாக உள்ளது. அவற்றையும் சேர்த்து பார்த்தால், கடந்த 2025 ஜனவரி மாத விற்பனையில் ஹீரோ மோட்டோகார்பை ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் முந்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 11:38 [IST]
English summary
Hero motocorp as usual top in domestic 2 wheelers sales in india
மேலும்... #two wheeler sales #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X