ஹீரோ 2-வீலர் ஃபேக்ட்ரி ராத்திரி, பகல்னு ஓய்வே இல்லாம ஓடுது... 52 நாடுகளில் பரவி கிடக்கும் நெட்வொர்க்!!

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), பண்டிகைக் கால விற்பனையில் பிரகாசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வஹான் (WAHAN) பதிவுத் தரவுகளின்படி, இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 9 லட்சத்து 94,690 2-சக்கர வாகனங்கள் விற்பனையை எட்டியுள்ளது.

2025 அக்டோபரில் மொத்தம் 6 லட்சத்து 35,808 ஹீரோ இருசக்கர வாகனங்கள் தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது ஹீரோ நிறுவனத்திற்கு பண்டிகைக் காலத்தின் இரண்டாவது தொடர்ச்சியான சாதகமான மாதமாகும். நீடித்த பண்டிகை உத்வேகம், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் ஜிஎஸ்டி சலுகைகள் போன்ற சந்தை நிலைமைகள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும்.

hero motocorp two wheeler retails

இதே மாதத்தில், ஹங்க் 440 (Hunk 440) மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 (Xpulse 200) போன்ற யூரோ5+ தரநிலை கொண்ட மாடல்களுடன் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய சந்தைகளிலும் ஹீரோ மோட்டோகார்ப் வெற்றிகரமாக நுழைந்தது. 52 நாடுகள் மற்றும் 5 கண்டங்களில் தனது இருப்புடன், ஹீரோ நிறுவனம் உலகளவில் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான 2-வீலர் பிராண்டாக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

வஹான் தரவுகளின்படி, 2025 அக்டோபர் 1 நிலவரப்படி, தெலுங்கானா மாநிலத்தை தவிர்த்து இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. விழாக்கால மற்றும் சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர், எக்ஸ்பல்ஸ், கிளாமர் எக்ஸ் போன்ற பைக்குகளும், டெஸ்டினி, ஜூம், பிளெஷர் போன்ற ஸ்கூட்டர் வகைகளும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

hero motocorp two wheeler retails

மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சமீபத்திய ஜிஎஸ்டி சலுகைகள், நுகர்வோர் உணர்வை மேம்படுத்தி, சந்தைகளில் சில்லறை விற்பனையைத் தூண்டின. தொடர்ந்து வரும் பண்டிகை உற்சாகம் மற்றும் மேம்பட்ட நுகர்வோர் நம்பிக்கையுடன், ஹீரோ மோட்டோகார்ப் வரும் மாதங்களில் நிலையான சில்லறை விற்பனைப் போக்கை எதிர்பார்க்கிறது.

ஹீரோ நிறுவனத்தின் துணை பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (VIDA Electric Scooter), விழா கால விற்பனையில் முன்னணி வகித்துள்ளது. ஹீரோ நிறுவனத்தின் விடா பிராண்ட், பண்டிகைக் கால மாதங்களில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. 2025 அக்டோபரில் சுமார் 16,000 விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆர்டிஓ பதிவுகள் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன.

hero motocorp two wheeler retails

இது முந்தைய மாதத்தை விட 24% வளர்ச்சியையும், கடந்த ஆண்டின் இதே அக்டோபர் மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகமான பதிவுகளையும் குறிக்கிறது. விடா ஈவூட்டர் விஎக்ஸ்2 (EVOOTER VX2) ஸ்கூட்டருக்கு இருந்த வலுவான தேவை காரணமாக, விடா அதன் முக்கிய சந்தைகளில் தொடர்ச்சியான முன்பதிவுகள் மற்றும் அதிக வாடிக்கையாளர் ஆர்வத்தை குறையாமல் பார்த்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமின்றி, ஹீரோ மோட்டோகார்பின் உலகளாவிய வணிகப் பிரிவு, 2025-26 நிதியாண்டின் கடந்த 6 மாதங்களில் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. 1 லட்சத்து 75,997 இரு சக்கர வாகனங்களை இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் விற்று, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 54% வளர்ச்சியை ஹீரோ அடைந்துள்ளது.

hero motocorp two wheeler retails

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, 1.4% குறிப்பிடத்தக்க உலகளாவிய சந்தைப் பங்கைப் ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளது. 2025 அக்டோபரில், இந்த நிறுவனம் 30,979 யூனிட்களை உலகளவில் விற்பனை செய்திருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 42.8% வளர்ச்சியாகும். கடந்த சில மாதங்களில் புது, புது வெளிநாட்டு சந்தைகளில் ஹீரோ மோட்டோகார்ப் நுழைந்துள்ளதால், இந்த எண்ணிக்கைகள் வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 11:16 [IST]
English summary
Hero motocorp celebrates feative season with nearly 10 lakh retails in october 2025
மேலும்... #hero motocorp #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X