ஸ்பிளெண்டர் இவி பைக் ரெடியாகிடிச்சு! சீக்கிரமே விற்பனைக்கும் வருதாம்? விலை என்ன இருக்கும்?

ஹீரோ மோட்டோகார்ப், மக்கள் பரவலாக பயன்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி, தனது எலெக்ட்ரிக் வாகன வரிசையை விரிவுபடுத்துவதற்கு தயாராகி வருகிறது. இந்த நிறுவனம், 2027ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்ப்ளெண்டர் பைக் எலெக்ட்ரிக் எடிசனை உருவாக்க பணியாற்றி வருகிறது. இந்த பைக் குறித்த விவரங்கள் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், எலெக்ட்ரிக் டூவீலர் துறையில் வளர்ந்து வரும் ஹீரோவின் ஈடுபாட்டை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

சமீபத்திய அறிக்கையின்படி, ஹீரோ மோட்டோகார்ப், டூவீலர்களை சேர்த்து தனது வாகன அணிவகுப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறது. தற்போது, அவர்கள் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஹீரோ, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சுமார் 6 புதிய வாகனங்களை உருவாக்கி வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஸ்ப்ளெண்டர் எலக்ட்ரிக் பைக் தற்போது அந்நிறுவனத்தில் ஏ.இ.டி.ஏ என்று அழைக்கப்படுகிறது.

Hero Splendor EV

ஸ்ப்ளெண்டர் எலெக்ட்ரிக் திட்டம், ஹீரோவின் மிகவும் பெரிய முயற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஜெய்ப்பூரில் உள்ள அவர்களின் ஆலையில் உருவாக்கப்பட்டு, 2027ம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனம், பட்ஜெட் பயணிகள் பிரிவில் கணிசமான மார்கெட் பங்கைப் பிடிக்கவும், தினசரி வணிக பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் இலக்காகக் கொண்டுள்ளது.

ஸ்ப்ளெண்டர் எலெக்ட்ரிக்கைத் தவிர, ஹீரோ 2026ம் ஆண்டில் விடா லிங்க்ஸ் எலெக்ட்ரிக் டிர்ட் பைக்கை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறது. இந்த மாடல், ஆண்டுக்கு சுமார் 10,000 பைக்குகளை உற்பத்தி செய்யும் திட்டத்துடன், வளர்ந்த சர்வதேச மார்கெட்டை இலக்காகக் கொண்டுள்ளது. லிங்க்ஸுடன், ஹீரோ, சமீபத்தில் இந்தியாவில் காப்புரிமை பெற்ற, குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட அக்ரோ லர்னிங், மின்சார டிர்ட் பைக்கை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த வளர்ச்சியில் உள்ள மற்றொரு முக்கியமாவ திட்டம், இரண்டு பிரீமியம் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கும் திட்டமான ஏ.டி.சே.ஏ ஆகும். இந்த பைக்குகள் 150சிசி மற்றும் 250சிசி கம்பஷன் இன்ஜின் பைக்குகளின் செயல்திறனைப் போன்றவை. ஸ்டைல் மற்றும் செயல்திறனைத் தேடுபவர்களான இளம் ரைடர்களை ஈர்க்கும் நோக்கத்திற்காக இந்த திட்டம் செயல்படவுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப், தனது எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான உற்பத்தி இலக்குகளை அமைத்துள்ளது. 2027-2028ம் ஆண்டளவில், அவர்கள் தங்கள் எலெக்ட்ரிக் வாகன அணிவகுப்பிலிருந்து ஆண்டுக்கு 2.5 லட்சம் பைக்குகள் உற்பத்தி செய்ய இலக்காகக் கொண்டுள்ளனர் - இதில் 2 லட்சம் பைக்குகள் ஸ்ப்ளெண்டர் எலெக்ட்ரிக் மற்றும் 50,000 பைக்குகள் திட்டம் ஏ.டி.சே.ஏ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது.

தனது எலெக்ட்ரிக் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதில் ஹீரோ நிறுவனத்தின் கவனம், வெவ்வேறு பிரிவுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பல்வேறு வகை வாகனங்களுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச மார்கெட்டை டார்கெட் செய்து தனது யுக்தியை பிரதிபலிக்கிறது. ஹீரோ எலெக்ட்ரிக் வாகன பிரிவு தனது முயற்சிகளைத் தொடர்ந்து, ஸ்டெபிளிட்டியான போக்குவரத்து தீர்வுகளின் வளர்ந்து வரும் நிலப்பரப்பில் முக்கிய பங்காற்றுபவராக தன்னை நிலைநிறுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது மக்கள் மத்தியில் அதிகமான மோகத்தை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற ஸ்பிளெண்ட்ர் போன்ற பைக்குகள் எலெக்ட்ரிக் வெர்ஷனை பெறுவதில் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெறும். எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இதனால் விற்பனையும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, January 16, 2025, 12:32 [IST]
English summary
Hero MotoCorp is expanding its electric vehicle range with the anticipated launch of the Splendor Electric motorcycle in 2027. The company aims to produce a diverse lineup, including models like the Lynx and Acro, targeting both domestic and international markets to meet growing demand for electric two-wheelers.
மேலும்... #hero motocorp #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+