உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய நிறுவனம்... இத்தாலி மார்க்கெட்டை மொத்தமா வளைச்சு போட போறாங்க...
இந்தியாவை சேர்ந்த டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த 1984ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். இடைப்பட்ட இந்த 41 ஆண்டுகளில், உலகின் பல்வேறு நாடுகளிலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டூவீலர் விற்பனையை தொடங்கியுள்ளது.
இதன் மூலம் உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் மாறியுள்ளது. இந்த சூழலில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு நாட்டில் தனது டூவீலர் விற்பனையை தொடங்கியுள்ளது. அது ஐரோப்பாவில் உள்ள இத்தாலி (Italy) ஆகும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் காலடி எடுத்து வைத்துள்ள 49வது சர்வதேச சந்தை இத்தாலி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இத்தாலியில் டூவீலர் விற்பனை மற்றும் சர்வீஸ் போன்ற பணிகளுக்காக பெல்பி இன்டர்நேஷனல் (Pelpi International) நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி அமைத்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போதைய நிலையில் 49 நாடுகளில் டூவீலர்களை விற்பனை செய்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப மையங்கள் உள்ளன. மறுபக்கம் இந்தியா, வங்கதேசம் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போதைய நிலையில் டெஸ்ட்டினி ப்ரைம், டெஸ்ட்டினி 110, டெஸ்ட்டினி 125, ஷூம், ஷூம் 125, ஷூம் 160, ப்ளஷர் ப்ளஸ் எக்ஸ்டெக் என்று ஒட்டுமொத்தமாக 7 ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. மேலும் ஏராளமான பைக்குகளையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.
அவை பேஷன் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0, ஹெச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஹெச்எஃப் 100, சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக், க்ளாமர், க்ளாமர் எக்ஸ், க்ளாமர் எக்ஸ்டெக், எக்ஸ்ட்ரீம் 125 ஆர், எக்ஸ்ட்ரீம் 160 ஆர், எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4வி, எக்ஸ்ட்ரீம் 250 ஆர், எக்ஸ்பல்ஸ் 210, எக்ஸ்பல்ஸ் 200 4வி மற்றும் கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் ஆகியவை ஆகும்.
அத்துடன் மாவ்ரிக் 440 மற்றும் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 ஆகிய பைக்குகளையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது. இவை எல்லாம் தவிர விடா (VIDA) என்ற பிராண்டின் கீழ், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தன்னுடைய டூவீலர் விற்பனையை இத்தாலியில் தொடங்கியிருப்பது வரவேற்க கூடிய ஒரு விஷயம்தான். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் வரிசை பைக்குகளுக்கு இத்தாலியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. இத்தாலியை தொடர்ந்து, கூடிய விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்கள் விற்பனை செய்யப்படும் சர்வதேச சந்தைகளின் எண்ணிக்கை விரைவில் 50 ஆக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








