மத்திய அமைச்சரே நேரில் வந்து அறிமுகம் செய்யும் அளவுக்கு ஸ்பெஷலான ஸ்கூட்டரா? பேட்டரி இல்லாமல் ரூ.60,000 விலை!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணை நிறுவனமான விடா (VIDA), இன்று வி.எக்ஸ்2 (VX2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.4 kWh பேட்டரியை கொண்ட கோ (Go) வேரியண்ட்டை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.
மத்திய அமைச்சரே நேரில் வந்து ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்ததால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசின் இலக்கை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த புதிய வெளியீடு, எலெக்ட்ரிக் வாகனங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் ஹீரோ விடாவின் நோக்கத்தையும், "கர் கர் இ-ஸ்கூட்டர்" (வீடுதோறும் இ-ஸ்கூட்டர்) என்ற தத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

புதிய விடா விஎக்ஸ்2 கோ 3.4 kWh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது, ஸ்கூட்டரில் இருந்து நீக்கக்கூடிய இரட்டை-பேட்டரி அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை பயணிக்கக்கூடியது. மேலும், அதிகபட்சமாக 6 கிலோவாட்ஸ் ஆற்றலையும், 26 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. ஓட்டுநர்கள் ஈகோ மற்றும் ரைடு மோட்களில் இந்த ஸ்கூட்டரை ஓட்டலாம்.
அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பயணிக்கக்கூடிய விடா விஎக்ஸ்2 கோ 3.4kWh ஸ்கூட்டர் தினசரிப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, தட்டையான கால் வைக்கும் பகுதி, பெரிய இருக்கை, 27.2 லிட்டர் கொள்ளளவில் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் பகுதி மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் ஆகியவை உள்ளன. ஆதலால், இது தனியாக மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது.
ஹீரோ விடா நிறுவனம் தனது 'சேவையாக பேட்டரி' (BaaS) மாடல் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. இது வாடிக்கையாளர்கள் பேட்டரியை நேரடியாக வாங்காமல் சந்தா முறையில் பெற அனுமதிக்கிறது. இது, ஸ்கூட்டரை வாங்குவதற்கு ஆகும் செலவுகளைக் குறைத்து, நெகிழ்வான சார்ஜிங் மற்றும் பராமரிப்பு ஆப்ஷன்களை வழங்குகிறது.

விடாவின் 4,600க்கும் அதிகமான சார்ஜிங் மையங்கள் மற்றும் 700க்கும் அதிகமான சேவை மையங்கள் கொண்ட பெரிய நெட்வொர்க்கை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்கள் பயன்படுத்தலாம். புதிய விடா விஎக்ஸ்2 கோ 3.4 kWh எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்து 2,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, BaaS வாயிலாக ஸ்கூட்டருக்கான பேட்டரியை சந்தா முறையில் பயன்படுத்தினால் ஸ்கூட்டரின் விலைகள் ரூ.60,000இல் இருந்து தொடங்குகின்றன.
ஒரு கிலோமீட்டர் பயணத்திற்கான சார்ஜுக்கு விடா சார்ஜிங் மையங்களில் ரூ.0.90 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடா விஎக்ஸ்2 கோ 3.4 kWh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்த நவம்பர் மாதத்தில் இருந்தே விடா டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கும். இந்த வெளியீட்டின் மூலம், விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் இப்போது விஎக்ஸ்2 கோ 2.2 kWh மற்றும் விஎக்ஸ்2 பிளஸ் ஆகியவற்றுடன் புதிய விஎக்ஸ்2 கோ 3.4 kWh வேரியண்ட் இணைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய விடா விஎக்ஸ்2 அறிமுகத்தின் மூலம், நடைமுறைக்கு உகந்த, மலிவு விலையிலான எலெக்ட்ரிக் வாகனங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல விடா உறுதிக்கொண்டுள்ளதை அறிய முடிகிறது. விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானதில் இருந்தே வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மை, வசதி மற்றும் நன்கு அறியப்பட்ட வடிவமைப்பிற்காக வரவேற்பைப் பெற்று வருகிறது.
"பதில்தே இந்தியா கா ஸ்கூட்டர்" (மாறும் இந்தியாவின் ஸ்கூட்டர்) என்று அங்கீகரிக்கப்பட்ட இது, வழக்கமான ஸ்கூட்டரின் நம்பகத்தன்மையையும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதுமைகளையும் இணைக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற விரும்பும் ஓட்டுநர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. புதிய விடா விஎக்ஸ்2 கோ 3.4 kWh எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த வெற்றியை முன்னெடுத்து, இந்தியப் பயணிகள் மற்றும் குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட செயல்திறன், நீண்ட தூரப் பயணம் மற்றும் சிறந்த வசதியை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








