30 நாளில் 4.5 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்ன இருக்குது?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 4.5 லட்சம் வாகனங்களை தயாரித்து மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ நிறுவனம் மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. இதன்படி இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 4,49,755 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்திற்கு 21 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதன் மூலம் ஜூலை மாதம் இந்நிறுவனத்திற்கு சிறப்பான ரெஸ்பான்ஸ் கிடைத்து அதிக விற்பனையை செய்துள்ளது.

ஹீரோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன்ஙகளுக்கான விடா என்ற பிராண்டை உருவாக்கியுள்ளது. இந்த விடா பிராண்டில் மட்டும் கடந்த ஜூலை மாதம் 11,226 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் 10,489 வாகனங்கள் வாகன தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 10.2 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறையை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விஎக்ஸ்2 ஸ்கூ்டடரில் இதை கொண்டு வந்துள்ளது. இதை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஹீரோ விடா விஎக்ஸ்2 ஸ்கூட்டரை வாங்கும் போது பேட்டரிக்கு விலை கொடுக்க தேவையில்லை அதை ஒரு சர்வீஸ் முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.

பைக் செக்மெண்டில் சமீபத்தில் தான் அந்நிறுவனம் தனது எச்எஃப் டீலக்ஸ் ப்ரோ பைக்கில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது. இது வாகனத்தின் ஸ்டைல், அந்த செக்மெண்டில் இல்லாத அம்சங்கள், அதிக மைலேஜ் உடன் அறிமுகமாகனது. இந்த பைக்கிற்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
ஹீரோ நிறுவனம் ஏற்றுமதியிலும் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இந்நிறுவனம் 37358 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்தாண்டு வெறும் 22739 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. இந்த நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகியுள்ளது. அதன் பிரதிபலிப்பு ஹீரோ நிறுவனத்திலும் இருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் மட்டும் ஹீரோ நிறுவனம் 4 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகள், 49,140 ஸ்கூட்டர்கள், 11,226 விடா இவி வாகனங்கள், 37358 வாகன்ஙகள் ஏற்றுமதி என மொத்தம் 4 லட்சத்து 49755 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2025ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியை சந்தித்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹீரோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை தயாரிக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் வளர்ச்சியை தொடர்ந்து பெற பல யுக்திகளை கையாண்டு வருகிறது. நிச்சயம் எதிர்காலத்திலும் இந்த டிரெண்டை தொடரும்.


Click it and Unblock the Notifications









