லிட்டருக்கு 70கிமீ மைலேஜ் தரும் பைக்கில் இப்படியொரு அப்டேட்டா? ஹீரோ நிறுவனம் சொன்னதை செய்து காட்டிடுச்சு!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து அப்டேட் செய்யப்பட்ட எச்.எஃப்100 (HF100) மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எச்.எஃப்100 பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், பைக்கின் என்ஜினில் முக்கியமான ஒரு அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் பைக்குகளுள் எச்.எஃப்100 ஒன்றாகும். இதனாலேயே இந்த பைக்கை அவ்வப்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மார்க்கெட்டில் அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில் தற்போதும் இந்த பைக் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2025 ஹீரோ எச்.எஃப்100 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.60,118 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

hero motocorp launched 2025 hf100

ஏற்கனவே கூறியதுபோல், புதிய எச்.எஃப்100 பைக்கின் தோற்றத்தில் எந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த சில வாரங்களாக அதன் பிரபலமான பைக்குகளை 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அப்டேட் செய்து வருகிறது. அவை அனைத்தின் தோற்றமும் முன்பை விட அப்டேட் செய்யப்பட்டது. ஆனால், புதிய எச்.எஃப்100 பைக்கின் தோற்றத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.

இதனால், 2025 ஹீரோ எச்.எஃப்100 பைக் தனது வழக்கமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பைக்கிற்கான பெயிண்ட் ஆப்ஷன்களில் கூட எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல், சிவப்பு/கருப்பு மற்றும் நீலம்/கருப்பு என இரு விதமான கலர் ஆப்ஷன்களில் 2025 எச்.எஃப்100 பைக் கிடைக்கும். தோற்றத்தில் மட்டுமின்றி, பெர்ஃபார்மன்ஸிலும் இந்த ஹீரோ பைக் எளிமையானது ஆகும்.

hero motocorp launched 2025 hf100

2025 எச்.எஃப்100 பைக்கில் முக்கியமான அப்டேட்டாக லேட்டஸ்ட் ஒபிடி-2பி (OBD-2B) மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, பைக்கில் இருந்து எந்த அளவிற்கு கார்பன் மாசு உமிழப்படுகிறது என்பதை கண்காணிப்பதுடன், பைக்கில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் ரைடருக்கு தெரிவிக்கும் கருவியும் இடம் பெற வேண்டும்.

மத்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலால் ஒபிடி-2பி அப்டேட் அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அனைத்து 2-வீலர்களிலும் இந்த அப்டேட்டை வழங்கிவரும் நிலையில், தற்போது எச்.எஃப்100 பைக்கிலும் இந்த அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அப்டேட்டிற்கு ஏற்ப எச்.எஃப்100 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,100 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்பு ரூ.59,018இல் இருந்து துவங்கிய இந்த ஹீரோ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்போது ரூ.60,118ஆக அதிகரித்துள்ளது. புதிய எச்.எஃப்100 பைக்கில் ஒபிடி-2பி மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 97.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இது எச்.எஃப்100 டீலக்ஸ் பைக்கில் வழக்கமாக பொருத்தப்படும் என்ஜினே ஆகும்.

ஒபிடி-2பி அப்டேட்டிற்கு ஏற்ப பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 8.02 பிஎஸ் மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 8.05 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இதே 97.2சிசி என்ஜின் தான் ஹீரோ ஸ்பிளெண்டர் (Splendor), பேஷன் பிளஸ் (Passion Plus), எச்.எஃப் டீலக்ஸ் (HF Deluxe) பைக்குகளிலும் பொருத்தப்படுகிறது.

2025 எச்.எஃப்100 பைக்கில் கிக்-ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக்-ஸ்டார்ட் என இரு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 2-ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்புக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டத்துடன் இரு சக்கரங்களிலும் 130மிமீ டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்குகளிலும் ஒபிடி-2பி அப்டேட் கொண்டுவரப்படுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலமாக, பைக்கில் இருந்து வெளியேற்றப்படும் என்ஜின் புகையின் அளவை கட்டுப்படுத்த முடியும். இருப்பினும், இந்த அப்டேட் உடன் சேர்த்து எச்.எஃப்100 பைக்கின் தோற்றத்தையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொஞ்சம் மெருக்கேற்றி இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 15:25 [IST]
English summary
Hero motocorp launched 2025 hf100 in india price features engine all details here
மேலும்... #hero motocorp #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+